- Advertisement -
Homeபொழுதுபோக்குபுதிய பிரமாண்ட வீட்டில் விரைவில் டும்டும்டும் சத்தம் கேட்கப் போவுது - விஜயகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்திய...

புதிய பிரமாண்ட வீட்டில் விரைவில் டும்டும்டும் சத்தம் கேட்கப் போவுது – விஜயகாந்த் ரசிகர்களை உற்சாகப்படுத்திய லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த 2005ம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர். ஆனால் துரதிஷ்டவசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் மறைந்துவிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி பிரமேலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் தலைமையில் தேமுதிக கட்சி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரண்டு மகன்களில் ஒருவர் விஜய பிரபாகரன் அரசியல் களத்தில் இருந்து வருகிறார். கேப்டனின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 5 படங்களில் நடித்தும் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை. எனினும் தொடர்ந்து தனக்கான ஒரு இடத்தை பிடிக்க சண்முக பாண்டியன் போராடி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே சென்னை சாலிகிராமத்தில் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் வசித்த வீடு உள்ளது. முதலில் அந்த வீடுதான் அந்தப் பகுதியில் மிகப்பெரிய வீடாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அங்கு மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட்களும் பங்களா வீடுகளும் உருவான நிலையில் இப்போது விஜயகாந்த் வீடு இருப்பதிலேயே மிகவும் சிறிய வீடாக காட்சியளிக்கிறது.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் விஜயகாந்த் குடும்பத்திற்காக மிகப் பிரமாண்டமான அரண்மனை போன்ற பெரிய வீடு ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த வீட்டின் கட்டுமான பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. வருகிற ஆகஸ்ட் மாதம் இந்த புதிய வீட்டுக்கு கிரஹப்பிரகாசம் நடத்தப்பட்டு விஜயகாந்த் குடும்பத்தினர் அங்கே குடியேற உள்ளனர்.

- Advertisement -

அதன் பிறகு சாலிகிராமத்தில் உள்ள கேப்டனின் வீடு, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகமாக செயல்படவும் அல்லது தேமுதிக கட்சி அலுவலகமாக செயல்படவும் அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் புதிய வீட்டுக்கு சென்ற பிறகு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அவருக்கு பெண் பார்த்து விட்ட நிலையில் மிக விரைவில் அந்த வீட்டில் டும் டும் டும் சத்தம் கேட்கும் என்ற ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களையும் தேமுதிக தொண்டர்களையும் உற்சாகமடைய செய்துள்ளது. விஜயபிரபாகரன் விருதுகள் நாடாளுமன்ற தேர்தலிலும் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வி கண்டார். தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்