- Advertisement -
Homeபொழுதுபோக்குநெதர்லாந்தில் நடந்து வரும் கார் ரேஸில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்குமார் - கார் டயர்...

நெதர்லாந்தில் நடந்து வரும் கார் ரேஸில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்குமார் – கார் டயர் வெடித்தது – என்னாச்சு என்ற பதட்டத்தில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத்குமார். அவரது நடிப்பில் இந்த ஆண்டில் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் பிப்ரவரி மாதம் 6ம் தேதி பொங்கல் பண்டிகையை அடுத்து வெளியான விடாமுயற்சி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அதன்பிறகு ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் மாபெரும் வசூலை அடைந்தது. பெரிய வெற்றிப் படமாக அஜீத்குமாருக்கு அமைந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இனி அடுத்த அஜீத்குமார் படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளதாக ஒரு தகவல் இருந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் கடந்த ஜனவரி துவங்கிய கார் ரேஸில் கலந்துக்கொண்டு வருகிறார். துபாய் இத்தாலி பிரிட்டன் என தொடர்ந்து பல நாடுகளில் நடத்தப்படும் இந்த கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்று வருகிறார். இதில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணிக்கு தலைவராக உள்ள அஜீத்குமார் வெற்றிகளையும் பெற்று வருகிறார்.

அதே நேரத்தில் நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பயிற்சி நேரங்களிலும் கார் ரேஸ்சில் பங்கேற்கும் போதும் தொடர்ந்து விபத்துகளில் சிக்கியுள்ளார். இதுவரை 4 முறை அவர் இந்த 4 மாதங்களில் நடந்த கார் ரேஸ்களில் விபத்தில் சிக்கிய நிலையில் உடலில் காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பி இருக்கிறார்.

- Advertisement -

ஒவ்வொரு முறை அவர் விபத்தில் சிக்கும் போதும் அவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் கடவுள் புண்ணியத்தில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் காயங்கள் இன்றி இந்த விபத்துகளில் இருந்து அவர் காப்பாற்றப்பட்டு வருகிறார். ஆனால் இது அவரது ரசிகர்களுக்கு கவலை தருவதாக இருந்து வருகிறது.

இப்போது நெதர்லாந்தில் நடந்து வரும் ஜிடி4 கார் ரேஸில் நடிகர் அஜீத்குமாரின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. டயர் வெடித்ததால் அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அஜீத் குமார் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பார் என கூறப்பட்டது. டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜீத் குமார் கார் ரேஸில் பங்கேற்றார். இந்த விபத்தில் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்