- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் வாங்கிய புதிய சொகுசு காரின் விலை இத்தனை கோடிகளா? - இது தரமான...

நடிகர் அஜீத்குமார் வாங்கிய புதிய சொகுசு காரின் விலை இத்தனை கோடிகளா? – இது தரமான சம்பவமா இருக்குதே என ஆச்சரியப்பட்ட ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கிய காலத்தில் பல முன்னணி நடிகர்கள் அந்த பணத்தை எல்லாம் நிலங்களில் தொழில்களில் முதலீடு செய்து அவற்றின் மூலம் நிறைய லாபம் பார்த்தனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் இன்றைய நடிகர்களில் சிலர் ஓட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் ஸ்டுடியோக்கள் என முதலீடு செய்து கணிசமான லாபம் பார்த்து விடுகின்றனர்.

சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வது நடிகர் கமல்ஹாசனாக மட்டுமே இருக்க முடியும். அவர் மட்டுமே படங்களில் நடித்து வாங்குகிற சம்பளத்தையும் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் மூலம் கிடைக்கிற லாபத்தையும் மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்து வருகிறார். இதனால் அவர் பல நேரங்களில் பலத்த நஷ்டத்தையும் அடைகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் தொழிலில் முதலீடு செய்யும் நிலையில் சில ஹீரோக்கள் தங்களது பேஷன் லைப் மட்டுமே முக்கியமாக கருதி தங்களது விருப்பங்களின் அடிப்படையில் பல கோடி ரூபாயை செலவு செய்கின்றனர். சில நடிகர்கள் பங்களாக்களை வாங்குகின்றனர். சில நடிகர்கள் நகைகள் வைரங்கள் என முதலீடு செய்கின்றனர். சிலர் தொழிற்சாலைகளை கட்டுகின்றனர்.

ஆனால் நடிகர் அஜீத்குமாரை பொருத்தவரை தனது வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை பைக்குகள் கார்கள் வாங்குவதற்கு என்றே ஒதுக்கி விடுகிறார். துபாயில் ஏற்கனவே 2 பங்களாக்களை சொந்தமாக வாங்கிவிட்ட நடிகர் அஜீத்குமார், டிராவல் ஏஜன்ஸி ஒன்றையும் அங்கு துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது. அத்துடன் பல உயர்ரக கார்களும் அவரிடம் இருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது நடிகர் அஜீத்குமார் புதிய சொகுசான கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் விலை 1 கோடி அல்ல 2 கோடி அல்ல.. 5 கோடி அல்ல. இந்த காரின் மொத்த விலை 18 கோடி ரூபாயாம். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட இந்த லக்ஸரி கார் வைத்திருக்கும் கொஞ்சம் பேரில் நடிகர் அஜீத்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானியின் மனைவி நீதா அம்பானி வைத்துள்ள கார்களில் ஒரு காரின் மதிப்பு மட்டும் 100 கோடி ரூபாய் என்கின்றனர். ஆடி ஏ9 கமிலியன் என்ற இந்த சொகுசு கார் நீதா அம்பானி உள்ளிட்ட உலகத்தில் மொத்தம் 11 பேரிடம் மட்டும்தான் இருக்கிறது. அதே போல் நடிகர் அஜீத்குமார் வாங்கியுள்ள ரூ. 18 கோடி மதிப்பிலான இந்த காரும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு ஒரு சிலரிடம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்