- Advertisement -
Homeபொழுதுபோக்குமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் அஜீத்குமார், காலில் ஏற்பட்ட காயம்தான் மருத்துவமனையில் ஏகே அட்மிட்...

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் அஜீத்குமார், காலில் ஏற்பட்ட காயம்தான் மருத்துவமனையில் ஏகே அட்மிட் ஆக காரணமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் பெரிய வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் துபாய் பிரிட்டன் இத்தாலி போன்ற நாடுகளில் நடந்துவரும் கார் பந்தயங்களில் கலந்து வரும் நடிகர் அஜீத்குமார், தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக இந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். அவரும் அவரது அணி சார்ந்த கார் பந்தய வீரர்களும் தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமாருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது கடந்த மாதம் 28ம் தேதியன்று வழங்கப்பட்டது. புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது கரங்களால் நடிகர் அஜீத்குமாருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் நடிகர் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி மகன் மற்றும் மகள், அஜீத்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமார், நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு தனது குடும்பத்துடன் திரும்பினார். சென்னை விமான நிலையில் அவருக்காக உற்சாகமாக காத்திருந்த ரசிகர் கூட்டம் வாழ்த்துகளை தெரிவித்தது.

- Advertisement -

இந்த சூழலில் நேற்று நடிகர் அஜீத்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து அவர் கார் ரேஸ்களில் பங்கேற்ற வெளிநாடுகளுக்கு செல்வதால் மருத்துவ உடல் பரிசோதனைக்காக அட்மிட் ஆனதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு நடிகர் அஜீத்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டில்லியில் இருந்து அஜீத்குமார் சென்னை திரும்பிய போது, சென்னை விமான நிலையில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு அஜீத்குமாருக்கு காலில் அடிபட்டதாகவும் தசை பிறழ்வு ஏற்பட்டதாகவும் அந்த காயம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றதாகவும் ஒரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்