- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தில் நான் நினைத்த விஷயங்களை செய்ய முடியவில்லை - நீண்ட நாட்களுக்கு பின் மனம்...

லியோ படத்தில் நான் நினைத்த விஷயங்களை செய்ய முடியவில்லை – நீண்ட நாட்களுக்கு பின் மனம் திறந்து பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமே மிகப் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்து அவர் இயக்கிய கைதி விக்ரம் ஆகிய படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக இருந்தன. அடுத்து லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் மாஸ்டர் லியோ என்ற 2 படங்கள் வெளியாகின.

இந்த 2 படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விமர்சன ரீதியாக மாஸ்டர் படத்தைக் காட்டிலும் லியோ படத்திற்கு வரவேற்பு மிகவும் குறைவாகவே இருந்தது. அதிலும் லியோ படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் மிக அதிகமாக வந்தது.

- Advertisement -

பிளாஷ்பேக்கில் இரட்டை பிறவி ஜோதிடம் நரபலி போன்ற விஷயங்களை படத்தில் கொண்டு வந்திருந்ததால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவருமே இந்த காலத்தில் இப்படி ஒரு படமா என்று லியோ படம் குறித்து கடுமையாக விமர்சித்தனர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, விஜய் படம் என்றாலே ஒரு இன்ட்ரோ சாங் கண்டிப்பாக இருக்கும். ஆனால் லியோ படத்தில் அப்படி எதுவும் வைக்க முடியவில்லை. அப்படியான ஒரு பாடல் கண்டிப்பாக வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலும் மார்க்கெட்டிங் தரப்பிலும் என்னிடம் கேட்டார்கள்.

- Advertisement -

அதனால் தான் 2வது பாதியில் பிளாஷ்பேக் காட்சியை ஒரு பாடலுடன் நான் ஆரம்பித்து இருப்பேன். பிளாஷ்பேக் 30 நிமிடங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்படி வைத்தால் படத்தின் நீளம் அதிகமாகி விடும் என்பதால் அதை 18 நிமிடங்களாக குறைத்தேன். அதனால் தான் பலவிதமான கலவையான விமர்சனங்கள் பிளாஷ்பேக்கிற்கு வந்தது என்று வெளிப்படையாக பேசிஇருக்கிறார்.

மேலும் லியோ படத்தில் 2வது பாதியில் வரும் பிளாஸ்பேக் காட்சியில் இடம்பெற்ற நான் வரவா என்ற பாடல் காட்சியில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற வரிகளும் அந்த பாடலில் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுவும் லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கூலி படம் வெளியான பிறகு என்னென்ன விமர்சனங்கள் எழப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்