நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். அவர் நடித்த குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது அடுத்த படம் ஏகே 64 படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்த படத்தையும் டைரக்ட் செய்ய இருக்கிறார். படத்தின் மொத்த பட்ஜெட் 260 கோடி முதல் 275 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் அஜீத்குமார் சம்பளம் மட்டுமே ரூ. 180 கோடி என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் ரூ. 12 கோடி என்றும் கூறுகின்றனர்.
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பைக் ரேஸ் ரைபிள் சுடுதல் ஏர்ஃகிராப்ட் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது பல்வேறு வெளிநாடுகளில் 10 மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் கார் ரேஸில் அஜீத்குமார் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி துவங்கிய இந்த கார் ரேஸ் வருகிற அக்டோபர் வரை தொடர்ந்து நடக்கிறது.
அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும், கார் ஓட்டுனராகவும் இந்த போட்டிகளில் நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து ஆர்வமாக கலந்துக்கொண்டு வருகிறார். இதுவரை நடந்த சில போட்டிகளில் அஜீத்குமார் 3ம் இடம் 5ம் இடம் 7ம் இடம் என முக்கிய இடங்களை பிடித்து வெற்றிவாகை சூடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார் ரேஸில் கலந்துக்கொள்ளும் நடிகர் அஜீத்குமார் அதுகுறித்த தகவல்களை, புகைப்படங்களை வீடியோக்களை பதிவிட ஏதுவாக அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற சமூக வலைதள பக்கத்தை சில வாரங்களுக்கு முன் துவங்கினார். அதில் அவ்வப்போது அஜீத்குமாரின் கார் ரேஸிங் புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கிய பேட்டிகள் வெளியாகி வருகின்றன.
இப்போது நடிகர் அஜீத்குமார் ஜிடி 4 யுரோப்பியன் சீரிஸ் 3வது சுற்று கார் ரேஸில் கலந்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அஜீத்குமார் கார் ரேஸிங் வலைதள பக்கத்தில் வெளியான வீடியோவில் மொட்டையடித்து தாடி மீசையின்றி வேதாளம் படத்தில் நடித்த கெட்டப்பில் அஜீத்குமார் காணப்படுகிறார். ஏன் இப்படி திடீரென மொட்டை அடித்த கெட்டப்புக்கு மாறினார் என தெரியலையே என ஏகே ரசிகர்கள் குழப்பத்திலும் ஆச்சரியத்திலும் உள்ளனர்.
வீடியோ





