நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜீத்குமார் மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே அடுத்த படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் துவங்கி வரும் அக்டோபர் மாதம் முடிய உள்ள கார் ரேஸ்களில் நடிகர் அஜீத்குமார் கலந்துக்கொண்டுள்ளார். இப்போது 4.5 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் 5.5 மாதங்கள் அவர் தொடர்ந்து கார் ரேஸில் கலந்துக்கொள்ள இருக்கிறார். இதில் சில ரேஸ்களில் அஜீத்குமார் கார் ரேஸிங் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, கார் ரேஸ் போட்டிகளுக்காக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை 42 கிலோ வரை எடையை குறைத்துள்ளேன். கார்பந்தயத்தில் மீண்டும் உடன் தகுதியுடன் இருக்க 8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்து விட்டேன்.
இதற்காக டயட் போர்ஷன் கண்ட்ரோல் நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்வேன். அதையும் தாண்டி சைவ உணவு உண்பவராக மாறிவிட்டேன். சகிப்புத்தன்மை கார் பந்தயத்தில் மிகவும் கடினமானவை என்பதால் இதயத்தையும் ஆன்மாவையும் ஒருநிலைப்படுத்த கடுமையாக போராடுவேன்.
நான் இதுவரை கார் ரேஸ் மற்றும் சினிமா என மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் பல ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இனி ஒரு நல்ல முடிவை எடுக்க உள்ளேன். கார் ரேஸ் காலகட்டங்களில் சினிமாவில் நடிப்பதில்லை என்றும் சினிமாவில் நடிக்கும் போது ரேஸில் கலந்து கொள்வது இல்லை என்றும் முடிவெடுக்கிறேன்.
அதாவது கார் ரேஸ் காலகட்டத்தில் படம் நடிக்காமல் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்துவதே சிறந்த வழி. வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். எனது அடுத்த படம் அடுத்த ஆண்டு 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் நடிகர் அஜீத்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





