- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் ஒய்ப் உங்களை ரொம்ப பாராட்டுனாங்க, பெருமையா சொன்னாங்க - நடிகர் அஜீத் இப்படி சொன்னது...

என் ஒய்ப் உங்களை ரொம்ப பாராட்டுனாங்க, பெருமையா சொன்னாங்க – நடிகர் அஜீத் இப்படி சொன்னது யாருகிட்ட தெரியுமா

- Advertisement -

நடிகர்களில் அஜீத் மிகவும் பண்பாளராக பலராலும் மதிக்கப்படுகிறார். நட்சத்திர நடிகர் என்ற பந்தா இல்லாமல், பொது இடங்களில் நடந்துகொள்வார். அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு அஜீத் அல்லது ஏகே என அழையுங்கள் என வெளிப்படையாக கூறியவர். சினிமாவில் எந்த மேக்கப்பும் இல்லாமல், தனது இயல்பான தோற்றத்தில் காட்சி தருபவர்.

அஜீத், திறமைசாலிகளை எப்போதும் அடையாளம் கண்டால், அவர்களை பாராட்டாமல் விடுவதில்லை. மிக எளிமையாக இருந்த தன்னை, கட்டியணைத்து பொதுவெளியில், எனது படத்தின் இயக்குநர் என அறிமுகப்படுத்தியவர் என வாலி படத்தை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அவரது நல்ல குணத்தை பாராட்டி இருந்தார்.

இந்நிலையில், தனது மனைவி ஷாலினி பாராட்டியது குறித்து, ஒருவரிடம் வெளிப்படையாக கூறி, அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதுவும், அவரது போட்டியாளராக சினிமா துறையினரால், ரசிகர்களால் கருதப்படும் நடிகர் விஜயின் படம் அது என்பதும் இதில் மிகவும் கவனிக்கத்தக்கது.

ஆர்ட் டைரக்டர் கிரண், பல முக்கிய படங்களில் கலை இயக்குநராக பணிசெய்து வருகிறார். குறிப்பாக நெல்சன் இயக்கும் படங்களில் ஆர்ட் டைரக்டர் கிரண்தான். அதுபோல், நெல்சன் இயக்கிய விஜய் படத்துக்கும் கிரண் தான் செட் போட்டிருக்கிறார். கிரண், பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், ஒரு ஷூட்டில் ஆர்ட் டைரக்டர் கிரண், அஜீத்தை சந்தித்து இருக்கிறார். அப்போது, என் வீட்டுல ஒய்ப் சொன்னாங்க. பீஸ்ட் படத்துல செட் சூப்பராக இருக்குது. அருமையாக செட் போட்டிருக்காங்க அப்படீன்னு பாராட்டுனாங்க, உங்களை பத்தி ரொம்ப பெருமையா சொன்னாங்க. நான் ஷூட்டிங் இருந்ததால, படம் பார்க்க முடியல, என்றார்.

அதே மாதிரி சூர்யா கிட்ட இதை காட்டின போதும், ரொம்பவும் அசத்தலாக இருக்குது என என்னை பாராட்டினார். இப்படி பெரிய பெரிய நட்சத்திரங்கள் என்னை பாராட்ட, எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நெல்சன் தான் காரணம், என தனது மகிழ்ச்சியை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் கிரண்.

சற்று முன்