- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழ்க்கையில் எதையும் சாதாரணமா எடுத்துக்காதீங்க, அதோட மதிப்பு எனக்கு தெரியும் - நடிகர் அஜீத்குமார் சொன்னதை...

வாழ்க்கையில் எதையும் சாதாரணமா எடுத்துக்காதீங்க, அதோட மதிப்பு எனக்கு தெரியும் – நடிகர் அஜீத்குமார் சொன்னதை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். அதே போல் விளையாட்டு துறையில் அவருக்கு அதீத ஆர்வம் இருந்து வருகிறது. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே பைக் ரேஸில் பலமுறை கலந்துக்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். 18 வயதிலேயே பைக் ரேஸில் ஆர்வம் காட்டியிருக்கிறார்

இப்போது பைக் ரேஸ் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்ற விளையாட்டுகளில் அஜீத்குமாரின் ஆர்வம் குறையவில்லை. சினிமாவில் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக உள்ள நடிகர் அஜீத்குமாருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இது இந்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் மிக முக்கியமானதாகும்.

- Advertisement -

இதுவரை தமிழ் சினிமாவில் இந்த பத்மபூஷன் விருது நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சிவாஜி கணேசன் விஜயகாந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அந்த வரிசையில் இப்போது நடிகர் அஜீத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி நடிகர் அஜீத்குமாரை பத்மபூஷன் அஜீத்குமார் என்றே ரசிகர்கள் தாராளமாக சொல்லலாம். ஆனால் அவர் அப்படி ரசிகர்கள் அழைப்பதை விரும்ப மாட்டார். ஏனெனில் ஏற்கனவே தல அல்டிமேட் ஸ்டார் போன்ற பட்டங்கள் வேண்டாம் என்று கூறியவர்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, எப்போது ஓய்வு பெறுவது என்பது நான் திட்டமிடம் ஒன்றல்ல. நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நான் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

- Advertisement -

வாழ்க்கையைப் பற்றி குறை சொல்பவர்களை பார்க்கிறேன். காலையில் எழுந்ததும் உயிரோடு இருப்பதே பெரிய வரம்தான். நான் தத்துவம் பேச விரும்பவில்லை. ஆனால் எனக்கு நிறைய காயங்கள், அறுவை சிகிச்சைகள் நடந்தன. புற்றுநோயிலிருந்து தப்பிய எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளார்கள்.

எனவே உயிரோடு இருப்பதே எவ்வளவு மதிப்பு மிக்கது என்பது எனக்குத் தெரியும். அதனால் தான் என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று நடிகர் அஜீத்குமார் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்