- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை கேட்பதில் புதிய டெக்னிக்கை கொண்டு வந்த கோலிவுட் வட்டாரம்… நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஐசரி...

கதை கேட்பதில் புதிய டெக்னிக்கை கொண்டு வந்த கோலிவுட் வட்டாரம்… நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஐசரி கணேஷ் போட்ட கணக்கு சரியாக ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரொம்ப காலமாக பெரிய பஞ்சமாக நீடித்துக் கொண்டிருப்பது நல்ல கதைகள்தான். ஆனால் ஒன்று அல்லது இரண்டு படங்களை எடுத்த தோல்வியடைந்த இயக்குனர்களிடம் நல்ல கதைகள் இருக்கின்றன. அதே போல் புதுமுக இயக்குனர்களிடம் நல்ல கதைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் கதைகளை கேட்க நேரம் ஒதுக்க தான் பெரும்பாலான நடிகர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஒரு நடிகர் நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டால் அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் முன்வருகின்றனர். அப்போது ஹீரோவிடம் கதை சொல்ல நேரம் கேட்கின்றனர். இதில் சில கதைகள் சிறப்பாக இருக்கின்றன. சில கதைகள் தகுதியற்றவையாகவும் இருக்கின்றன. இதனால் கதை கேட்க நேரம் ஒதுக்கவே நடிகர்கள் யோசிக்கின்றனர்.

- Advertisement -

இதனால் சில நடிகர்கள் தங்களது மேனேஜர்கள் மற்றும் உதவியாளர்களிடம் கதை சொல்லுமாறு ஏற்பாடு செய்து விடுகின்றனர். இதில் பெரும்பாலும் நடிகர்களுக்கு கிடைப்பது தோல்விதான். ஏனெனில் கதை கேட்பவர் மனநிலையை பொறுத்து அந்த கதையின் மதிப்பீடுகள் இருக்கும். நல்ல கதைகளை கூட இது எடுபடாது என்று கருத தோன்றும்.

அதற்காக தான் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய பெப்சியின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி பேசுகையில், நடிகர்கள் மேனேஜர்களை வைத்து கதை கேட்காதீர்கள். நீங்களே நேரடியாக கதை கேளுங்கள். அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க முடியும் என்று அட்வைஸ் செய்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் லவ் டுடே டிராகன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு கதை சொல்ல ஏராளமான இயக்குனர்கள் புதுமுக இயக்குனர்கள் வருவதால், இதற்காக 4 பேர் கொண்ட கதை கேட்கும் குழுவை அவர் அமைத்திருக்கிறார். இவர்களிடம் சொல்லப்படும் கதை ஓகே என்று அவர்களை திருப்திபடுத்தும் பட்சத்தில் அந்த இயக்குனரிடம் பிரதீப் ரங்கநாதன் நேரடியாக கதை கேட்க நேரம் ஒதுக்கிறார்.

அதே போல் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூம் கதை கேட்கும் குழு என 4 பேர், பிறகு அடுத்தகட்டமாக 3 பேர் என 2 குழுக்களை நியமித்திருக்கிறார். முதல் மற்றும் 2வது குழுவிடம் பாஸ்மார்க் வாங்கி வரும் இயக்குனரின் கதையை கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இது ஒருவிதத்தில் நல்ல கதைகளை தவற விடக்கூடாது என்ற முக்கிய நோக்கம் என்பதால் இது கோலிவுட்டில் ஒர்க் அவுட் ஆக வேண்டுமே என இயக்குனர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்