- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆன நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா -...

மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆன நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா – ஆனா அந்த கேரக்டரில் நடிக்கிறாரே என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கில் கீதா கோவிந்தம் படம்தான் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து புஷ்பா புஷ்பா 2 படங்கள் மிகப்பெரிய அளவில் தென்னிந்திய சினிமா நட்சத்திர நடிகையாக அவரை உயர்த்தியது. இந்தியிலும் அனிமல் படத்தில் நடித்தது பெரிய வரவேற்பை கவனத்தை ரசிகர்களிடம் அவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி மொழி படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை 3 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் கார்த்தியுடன் சுல்தான் நடிகர் விஜயுடன் வாரிசு மற்றும் நடிகர் தனுஷூடன் குபேரா ஆகிய 3 படங்களில் நடித்தும் இந்த 3 படங்களுமே தமிழில் பெரிய வரவேற்பை பெறாததால் தமிழில் தொடர்ந்து ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இல்லை.

- Advertisement -

எனினும் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தெலுங்கு முன்னணி நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரிஸ் படங்களின் தொடர்ச்சியாக காஞ்சனா 4ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை கோல்ட் மைண்ட் நிறுவனத்தின் மணிஷா தயாரிக்கின்றார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை நோரா பாதேகி நடித்து வருகிறார்.

- Advertisement -

வில்லன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் நடிகர் ராமச்சந்திரா ராஜூ நடித்திருக்கிறார். ஏற்கனவே காஞ்சனா 4 படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் காஞ்சனா 4 படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் அது தவிர்க்கப்பட்டுள்ளது.

இப்போது காஞ்சனா 4 படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு பிளாஷ்பேக் காட்சிகள் புதுச்சேரியில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா கமிட் செய்யபட்டுள்ளார். இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக ராகவா லாரன்ஸ் படத்தில் நாயகிகளை கொடூரமான பேயாக காட்டுவதுதான் வழக்கம். இந்த படத்தில் ஒரு கேரக்டரில் அழகான ராஷ்மிகா நடிக்கப் போகிறாரா என்று அவரது ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்