- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் - நடிகர் சிம்பு பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லையா? பெப்ஸி தலைவர்...

அரசன் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம் – நடிகர் சிம்பு பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லையா? பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி காட்டிய அதிரடி!

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் இப்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். பிரியங்கா மோகன் ஆண்ட்ரியா விஜய் சேதுபதி யோகலட்சுமி கிஷோர் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பொங்கலுக்கு முன்பு கோவில்பட்டியில் 2 வாரங்கள் தொடர்ந்து நடந்தது. அதன்பிறகு 2வது கட்ட படப்பிடிப்பு சென்னையில் பெரிய ஷெட் அமைத்து 2 வாரங்களாக நடந்து வந்தது. சிம்பு பிரியங்கா மோகன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது அரசன் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதற்கு காரணம் நடிகர் சிம்புவின் பண விவகாரம் பஞ்சாயத்துதான் என்பதும் தெரிய வந்துள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆனார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் இந்த படம் உருவாக திட்டமிட்ட நிலையில், இதற்காக ரூ. 5 கோடி வரை ஐசரி கணேஷ் சிமபுவுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்தார். ஆனால் கமிட் ஆன தேதியில் இந்த படத்தில் சிம்பு நடிக்காமல் தாமதம் செய்துவிட்டார். பிறகு அந்த படம் டிராப் ஆகி விட்டது.

- Advertisement -

வாங்கிய அட்வான்ஸ் பணத்தை சிம்பு திருப்பி தராத நிலையில் சில ஆண்டுகள் தாமதித்ததால் இதுகுறித்து ஐசரி கணேஷ் கோர்ட்டில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் கோர்ட்டில் சமரசம் பேசி வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. ஆனால் இதுவரை சிம்பு தரப்பில் ஐசரி கணேஷூக்கு பணத்தை திருப்பி தரவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணியிடம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் புகார் அளித்த நிலையில், அந்த அமைப்பின் தரப்பில் தொழிலாளர்கள் சிம்பு நடிக்கும் படத்தில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டதால் அரசன் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இது எஸ்டிஆர் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்