- Advertisement -
Homeபொழுதுபோக்குகான்சிட்டி படம் எப்படி இருக்கும்? - பல சூப்பர் அப்டேட்டுகளை அள்ளித் தந்த படத்தின் நாயகன்...

கான்சிட்டி படம் எப்படி இருக்கும்? – பல சூப்பர் அப்டேட்டுகளை அள்ளித் தந்த படத்தின் நாயகன் அர்ஜூன்தாஸ், தனது திருமணம் குறித்தும் ஓபனா சொல்லிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் ஹரிஷ் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் நடிகை அன்னாபென் நடித்த கான்சிட்டி படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து நடிகர் அர்ஜூன் தாஸ் ஒரு நறுக்காணலில் பேசியதாவது, நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்தவுடன் அந்த படம் பற்றிய விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.

அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த பட தேர்வுகளிலும் நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. என்ன மாதிரியான கதைகள் நடிக்க வேண்டும் எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அந்த கருத்துக்கள் மூலமாகவே நான் புரிந்து கொண்டேன். என் பெற்றோரும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாக கேட்பார்கள்.

- Advertisement -

கான்சிட்டி குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான மகிழ்ச்சியான திரைப்படம். படத்தின் கதையைப் பற்றி நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம் அவர்களது வாழ்க்கை அதில் நடக்கும் உணர்வு பூர்வமான தருணங்கள் காமெடி மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. 2 மணி நேரத்துக்கு மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாகவும் இது இருக்கும்.

இப்போது நெகட்டிவ் கேரக்டரில் மட்டுமல்லாமல் காமெடி குடும்பம் உணர்வுபூர்வம் என பலவிதமான கதைகளில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குனர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களை தருகிறது. எனக்கு காதல், திருமணம் என்கிற செய்திகள் எங்கிருந்து அது போன்ற தகவல்கள் வந்தது என்று எனக்கே தெரியவில்லை.

- Advertisement -

வீட்டில் இருந்தும் உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் உண்மையில் எனக்கு நிச்சயதார்த்தமோ திருமண ஏற்பாடுகளோ எதுவும் நடக்கவில்லை. இப்போதைக்கு காதல் திருமணம் எதுவுமில்லை. சினிமா மட்டுமே என்னுடைய முழு ஈடுபாடாக உள்ளது.

தமிழக முதல்வருடன் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்த முடியவில்லை. அவர் பிறந்தநாளுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை தெரிவித்தேன். அஜீத்குமாருடன் குட்பேட் அக்லி படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்தது மறக்க முடியாதது. அவர் கார் ரேஸில் ஆர்வமாக இருப்பதால் அடுத்த படம் இன்னும் வெளிவரவில்லை. அதற்காக நானும் காத்திருக்கிறேன் என்று நடிகர் அர்ஜூன் தாஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்