- Advertisement -
Homeபொழுதுபோக்குபாசமலர் போன்ற ஒரு கதையில் நடிக்க தயாரான நடிகர் அருள்நிதி - ஆனா இந்த படத்தில்...

பாசமலர் போன்ற ஒரு கதையில் நடிக்க தயாரான நடிகர் அருள்நிதி – ஆனா இந்த படத்தில் அந்த விஷயங்கள் பத்தி தான் பேசப் போறாங்களாமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு நல்ல நடிகராக இளம் நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் என்ற படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து இரவுக்கு ஆயிரம் கண்கள் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் டைரி தேஜாவு களத்தில் சந்திப்போம் பிருந்தாவனம் தகராறு ஆறாது சினம் மௌனகுரு ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் உதயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் காமெடி காதல் ஆக்சன் என பல படங்களில் அருள்நிதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இதற்கிடையே இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்த படம் டிமாண்டி காலனி. கடந்த 2015ம் ஆண்டில் வெளியான இந்த திரில் திகில் படம் மாபெரும் வெற்றி பெறற நிலையில், மீண்டும் 9 ஆண்டுகள் கழித்து 2024ம் ஆண்டில் டிமாண்டி காலனி 2ம் பாகமாக வெளியானது.

கடந்த 2024ம் ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி 2 படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். முக்கிய கேரக்டரில் நடிகர் அருண்பாண்டியனும் நடித்திருந்தார். இந்த படத்தில் வந்த திகில் காட்சிகள் ரசிகர்களை மிரட்டி விட்டன. இதன் தொடர்ச்சியாக டிமாண்டி காலனி 3ம் பாகம் உருவாகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி 3 படத்தில் நடித்து வரும் அருள்நிதி, இப்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இது அண்ணன் தங்கை பாசத்தை கதைக்களமாக கொண்ட ஒரு திரைக்கதையில் உருவாகிறது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கு மை டியர் சிஸ்டர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கோவில்கள் மற்றும் கோவிலில் கடைபிடிக்கப்படுகிற நடைமுறைகள் குறித்த விஷயங்களை இந்த படம் பேசும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் டிமாண்டி காலனி 3 படம் போலவே இந்த மை டியர் சிஸ்டர் படமும் வெளியானால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என இப்போதே ரசிகர்கள் பேசத் துவங்கி விட்டனர்.

சற்று முன்