- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் யாருக்குமே வாய்த்திருக்காது - நடிகர் அருண் விஜய்...

ரஜினியுடன் எனக்கு கிடைத்த முதல் அனுபவம் யாருக்குமே வாய்த்திருக்காது – நடிகர் அருண் விஜய் சொன்ன விஷயம் … வேற லெவல்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்தவர் அருண் விஜய். மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன். ஆனால் பெரிய அளவில் இவரது படங்கள் வெற்றி பெறவில்லை. இவரது சினிமா கேரியரில் பிரியம் பாண்டவர் பூமி தடம் குற்றம் 23 என்னை அறிந்தால் போன்ற சில படங்களே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

ஆனால் திறமையான நடிகர் என்பதை பல படங்களில் அருண்விஜய் நிரூபித்து இருக்கிறார். ஆனால் அவருக்கான கதைகளும் சரியான கேரக்டர்களும் அமையாததால் அவரால் பெரிய நடிகராக பிரபலமாக முடியவில்லை. எனினும் அவரது ஆக்சன் காட்சிகள், நடிப்பு சிறப்பாகவே இருந்திருக்கிறது. இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான்படத்தில் இருந்து சூர்யா விலகினார். பிறகு அந்த கேரக்டரில் நடிகர் அருண் விஜய் வாய் பேசாத ஒரு கேரக்டரில் நடித்தார்.

- Advertisement -

கடந்த 10ம் தேதி வெளியான வணங்கான் படம் 6 நாட்களில் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் மத்தியில் அருண்விஜய்க்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் பாலா, இந்த படத்தின் மூலம் தான் யாரென நிரூபித்து விட்டார். இன்னும் பழைய பார்மில்தான் இருக்கிறார் என்றும் பாலாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அருண் விஜயிடம், நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம் பிரியம். அந்த படத்தில் முதல் நாள் ஷூட்டிங். அன்று நடிகர் ரஜினிகாந்தை அப்பா அழைத்திருந்தார். அப்போது ரஜினி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், முடிந்தால் வருகிறேன் என்றுதான் கூறியிருந்தார்.

- Advertisement -

ஏவிஎம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கேமரா முன்பு முதல் ஷாட் எடுக்க தயாராக இருந்தனர். நான் கேமரா முன் நின்று நடிக்கப் போற முதல் காட்சி அது. மேக்கப் ரூமில் நான் உட்கார்ந்திருந்தேன். ரொம்ப பாஸ்ட்டா ரஜினி சார் அங்கே வர்றார். அப்பாகிட்ட பேசினார். எனக்கு வாழ்த்து சொன்னார். நான் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினேன்.

என்னிடம், ரஜினி போலாமா போலாமா என்றார். வெளியே கேமரா இருக்கு சார் என்றவுடன் என் கையை பிடித்துக்கொண்டு ரஜினி நடக்க ஆரம்பித்து விட்டார். அப்படி முதல் ஷாட்டில் கேமரா ரோல் ஆனது நான் ரஜினி கையை பிடிச்சிட்டு நடந்து வந்த சீன்தான். அப்புறம் நெத்தியில் எனக்கு பொட்டு வெச்சுட்டு வெற்றி சிம்பல் கையில் காட்டுவார். அப்போது ஷாட் எடுக்கப்பட்டது. முதல் நாள் ஷூட்டிங்கில் இப்படி ஒரு அனுபவம் யாருக்குமே வாய்த்திருக்காது என்று அருண் விஜய் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்