- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை; லப்பர் பந்து படம்...

ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது மாரி செல்வராஜ் இயக்கிய வாழை; லப்பர் பந்து படம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா? போட்றா வெடிய… குஷியான ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும் படைப்பாளிகளில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அவரது முதல் படம் பரியேறும் பெருமாள். மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்ற அந்த படத்தை தொடர்ந்து அடுத்து அவரது இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். தனுஷ், நட்டி நடிப்பில், இந்த படம் வெற லெவலில் இருந்தது.

இரண்டு படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய 3வது படம் மாமன்னன். காமெடி நடிகர் வடிவேலுவை குணச்சித்திர நடிகராக மாற்றி, மாமன்னன் கேரக்டரில் வடிவேலுவை வாழ வைத்திருந்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பகத் பாசில் நடிப்பு ரத்னவேலு கேரக்டரில் மிரட்டியது.

- Advertisement -

மாமன்னன் படமும் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து, மாரி செல்வராஜ் இயக்கிய படம் வாழை. கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான இந்த படத்தை திரை பிரபலங்களே கொண்டாடினர். குறிப்பாக இயக்குனர்கள் பாலா, ராம், மிஷ்கின், பாரதிராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரஜினிகாந்த், ஜீவா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரூ. 27 கோடி ரூபாய் வரை வசூலித்தாக கூறப்பட்டது. வறுமையை படத்தில் காட்டி, பல கோடிளை சம்பாதித்து விட்டார் மாரி செல்வராஜ் என்ற விமர்சனமும் அவர் மீது எழுந்தது. தனது ஒவ்வொரு படத்திலும் பாராட்டுகளை காட்டிலும், மிக அதிகமான எதிர்மறை விமர்சனங்களை மாரி செல்வராஜ் சந்தித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் இயக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில், மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம், நாளை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நாளை முதல் ஓடிடி தளத்திலும் வாழை படத்தை ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அதே போல் கடந்த மாதம் 20ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கும் லப்பர் பந்து படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் தகவல் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கெத்து கேரக்டரில் தினேஷ், அன்பு கேரக்டரில் ஹரீஷ் கல்யாண், அவரது காதலியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தினேஷ் மனைவியாக சுவாசிகா மற்றும் பால சரவணன், காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான லப்பர் பந்து படம், மிகப்பெரிய வெற்றிப் படமாக திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் 18ம் தேதி வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் லப்பர் பந்து படம் ரிலீஸாகிறது. திரையரங்குகளை போலவே, ஓடிடி தளத்தில் லப்பர் பந்து படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள், அந்த படத்தை மீண்டும் ஓடிடி தளத்தில் காண ஆவலாக உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்