- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இப்படிபட்டவரா- அவரை பற்றிய உண்மைகளை புட்டுபுட்டு வைத்த நடிகர் பயில்வான்...

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி இப்படிபட்டவரா- அவரை பற்றிய உண்மைகளை புட்டுபுட்டு வைத்த நடிகர் பயில்வான் ரங்கநாதன்

- Advertisement -

நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் ரசிகர்களுக்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. முதல் படத்திலேயே அவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால், அண்ணாத்த, ஜெயிலர் உள்பட அடுத்தடுத்த பல படங்களில் அவர் நடித்தார்.

விரைவில் ரிலீஸ் ஆக உள்ள கங்குவா படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது மைசூருவில் நடந்துவரும் கவின் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த சூழலில்தான் சீரியல் நடிகை சங்கீதாவை அங்குள்ள சாமுண்டி கோவிலில் வைத்து திருமணம் செய்திருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, ரெடின் கிங்ஸ்லி 46 வயதில் திருமணம் செய்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழகி இருக்கிறேன். அவரும் தூத்துக்குடி, நானும் தூத்துக்குடியைச் சேர்ந்தவன் என்பதால், நடிகராவதற்கு முன்பே எனக்கு அவரை தெரியும்.

ரெடின் கிங்ஸ்லியை பலருக்கு காமெடி நடிகராக தான் தெரியும். உண்மையில் அவர் ஒரு பெரிய தொழிலதிபர். அவரிடம் 300 பேர் வேலை செய்கின்றனர். அவர் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என இந்த மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் பொருட்காட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகளில் இவர் பல ஆண்டுகளாக பங்கெடுத்து வருகிறார்.

- Advertisement -

வெளிநாடுகளில் உள்ள முக்கிய அதிசய விஷயங்களை இவர் தனது பொருட்காட்சியில் செயற்கையாக உருவாக்கி வைத்து மக்களை கவர்கிறார். பாரீஸ் பிரிட்ஜ், கைலாசம் பனிமலை, ஈபிள் டவர், உலகின் அதிசய விஷயங்களை அப்படியே தனது பொருட்காட்சியில் தத்ரூபமாக செயற்கையாக உருவாக்கி அதனால் மக்களின் வரவேற்பு பெறுகிறார். அதனால் சினிமாவில் நடித்து பெறும் சம்பளத்தை விட பொருட்காட்சி நடத்துவதால் பலமடங்கு அதிகமாக லாபம் பெறுகிறார்.

நடிகை சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ரெடின் கிங்ஸ்லிக்கு இது இரண்டாவது போன்ற வதந்திகள் பரவி வருகின்றன. இது எல்லாம் உண்மையல்ல. அவர்கள் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வந்த நிலையில் இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை என்று இந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்