தமிழ் சினிமாவில் அன்பு காதல் கிசுகிசு அம்மா அப்பா செல்லம் வீரம் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த தம்பி ஆவார். தமிழில் மட்டுமின்றி மலையாளத்தில் நிறைய படங்களில் பாலா நடித்திருக்கிறார். மலையாளத்தில் நிறைய வாய்ப்பு வந்ததால் அங்கேயே நடிகர் பாலா செட்டிலாகி விட்டார் என்புதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் பாலாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி அந்த 2 மனைவிகளுடன் வாழ்ந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த நிலையில், 3வதாக டாக்டர் எலிசபெத் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2 ஆண்டுகளில் அவரை நடிகர் பாலா பிரிந்தார். இப்போது உறவுக்கார பெண் கோகிலா என்பவரை 4வது திருமணம் செய்து இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பாலாவுக்கும் அவரது 3வது மனைவி டாக்டர் எலிசபெத்துக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் பாலாவுடன் குடும்பம் நடத்திய போது அவர் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக சில மாதங்களுக்கு முன் எலிசபெத் போலீசில் புகார் அளித்தார். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் படுக்கையில் இருந்தபடி வீடியோ ஒன்றை எலிசபெத் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் கேரளா முதல்வரிடம் சென்று முறையிட்டும் கூட என் பிரச்சனை இன்னும் தீரவில்லை. நடிகர் பாலா என் மீது தொடர்ந்து வரும் தாக்குதல் மிரட்டல் சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புதல் என எல்லாவற்றையும் நான் ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இருக்கிறேன்.
ஆனால் நீதிமன்றத்தில் சொன்ன தேதியில் ஆஜராகாமல் பாலா தவிர்த்து வருகிறார். பொதுவாகவே பெண்கள் வெளியே வந்து தங்கள் பிரச்னையை சொன்னால் நீதி கிடைக்கும் என்று சொல்வார்கள். அதை நம்பித்தான் இதில் இறங்கினேன். ஆனால் இது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் நான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டேன். ஒருவேளை இந்த வீடியோ வெளியானால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.
அதை பார்ப்பதற்கு நான் உயிரோடு இருப்பேனா என்றும் தெரியாது. அப்படி எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு நடிகர் பாலாவும் அவர் குடும்பத்தினரும் தான் முழு பொறுப்பு என்று அந்த வீடியோவில் எலிசபெத் கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதால் மலையாள சினிமாத் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து கேரளா போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.





