தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சார்லி. கடந்த 1980 90களில் வெளியான பல படங்களில் காமெடி ரோலில் நடிகர் சார்லி நடித்திருப்பார். குறிப்பாக ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக அவர் இருப்பார். விக்ரமன் இயக்கிய புது வசந்தம் பூவே உனக்காக படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார்.
சார்லியின் உண்மையான பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்பதாகும். கோவில்பட்டியை சேர்ந்தவர். 1000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை நடத்தியவர். இது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. சினிமாவுக்காக தனது பெயரை சார்லி என மாற்றிக்கொண்டார்.
நடிகர் சார்லி நடித்த வருஷம் 16 காசி வேல் ஐயா வேங்கை வெற்றிக்கொடி கட்டு பொங்கலோ பொங்கல் சிங்கார வேலன் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் மாநகரம் காதலுக்கு மரியாதை பிரண்ட்ஸ் ஒன்ஸ்மோர் ஆணழகன் என பல படங்களில் காமெடி ரோலில் சார்லி நடித்திருக்கிறார்.
தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரை நடிப்பை மிக இயல்பாக வெளிப்படுத்தக் கூடியவர் நடிகர் சார்லி. அதனால்தான் இயக்குனர்கள் பாசில் விக்ரமன் வி சேகர் லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள், சார்லிக்கு தங்களது படங்களில் வாய்ப்பளித்தனர். அதிலும் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து சார்லி நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது.
எனினும் தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பு ஆளுமை மிக்க சில நடிகர்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் போனது துரதிஷ்டவசமானதுதான். அதில் நடிகர் சார்லியும் ஒருவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சார்லி கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போது நான் நடித்த படங்களில், என்னுடைய கேரக்டரை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டால் படத்துக்கு எந்த பாதிப்பும் வராது.
அந்த மாதிரியான மிக சாதாரண கேரக்டர்களில் எல்லாம் பிழைப்புக்காக நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது இந்த கேரக்டர் இல்லை என்றால் படம் நகராது என்பது போன்ற நல்ல கேரக்டர்கள்தான் இப்போதுதான் எனக்கு வருகிறது. அதனால்தான் நான் காமெடி ரோலில் இருந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று நடிகர் சார்லி ஓபனாக கூறியிருக்கிறார்.





