- Advertisement -
Homeபொழுதுபோக்குவாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி - என்ன பாஸ் நீங்களே...

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி – என்ன பாஸ் நீங்களே இப்படி பேசலாமா?

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இப்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார் .இந்த படத்தில் நடிகை திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழில் ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் 1980களில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தில் வில்லனாக சிரஞ்சீவி நடித்திருந்தார்.

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தமிழில் முன்னணி நடிகராக உள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்த கேம் சேஞ்சர் சமீபத்தில் வெளியானது. மேலும் ராஜமவுலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள பிரம்ம ஆனந்தம் என்ற படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் பெண் பிள்ளைகள் பற்றி அவர் பேசிய விஷயம் இப்போது சர்ச்சையாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது, என் வீட்டில் எப்போதும் என்னைச் சுற்றி பெண்களே அதிகமாக இருக்கிறார்கள். அதனால் மகளிர் விடுதியில் வார்டனை போன்று நான் உணர்கிறேன். மேலும் எனது பரம்பரை தொடர இந்த முறையாவது மகனை பெற வேண்டும் என எனது மகன் ராம்சரணைக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்றும் நான் பயப்படுகிறேன் என்றும் அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி பேசியிருக்கிறார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணுக்கு கிளீன் காரா என்ற மகள் ஏற்கனவே உள்ளார். மேலும் சிரஞ்சீவியின் இரு மகள்களான சுஷ்மிதா ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் உள்ளனர். ஆண் பெண் சமம் நிலையில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அவர்கள் தான் குடும்பத்தின் வாரிசு என்று நடிகர் சிரஞ்சீவி பிரம்ம ஆனந்தம் விழாவில் பேசி இருப்பது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பலரும் இணையத்தில் நடிகர் சிரஞ்சீவியை விமர்சித்து வருகின்றனர். நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் ஆந்திராவின் துணை முதலமைச்சர் ஆக உள்ள நிலையில் பெண்களுக்கு எதிரான கருத்தை அவரது அண்ணன் சிரஞ்சீவியே கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகன் ராம்சரணுக்கு ஏற்கனவே மகள் உள்ளதால், தனது வாரிசாக பேரன் வர வேண்டும் என நினைப்பது ஒரு தாத்தாவாக சிரஞ்சீவியின் எதிர்பார்ப்பில் எந்த தவறு எதுவும் இல்லையே என்றும் ஒரு தரப்பினர் பதில் தந்து வருகின்றனர்.

சற்று முன்