- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மாபெரும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குகிறார் ஹிப்ஹாப் ஆதி... போடு அதுக்கும் சுந்தர்.சி.தான்...

அந்த மாபெரும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குகிறார் ஹிப்ஹாப் ஆதி… போடு அதுக்கும் சுந்தர்.சி.தான் தயாரிப்பாளரா!

- Advertisement -

கிளப்ல மப்புல என்னும் பாடல் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆதி. தனி ஆல்பமாக youtube வலைதளத்தில் வெளியான அந்த பாடல், மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அங்கிருந்துதான் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தார் ஹிப்ஹாப் ஆதி. பிறகு, திரைத்துறையில் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் ஆதி.

இசையமைப்பாளர்கள் அனிருத் விஜய் ஆண்டனி உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றிய அவருக்கு, வரிசையாக பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இதனை பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை அவர் வெளிகாட்டினார். அதிலும் குறிப்பாக தனி ஒருவன் திரைப்படம் ஆதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அயராத உழைப்பு தெரிந்தது.

- Advertisement -

படத்தின் பின்னணி இசையும் சரி பாடல் இசையும் சரி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்று நேற்று நாளை, கதகளி, கோமாளி, கவண், கலகலப்பு 2, ஆம்பள, இமைக்கா நொடிகள் என ஆதியின் இசையமைப்பில் வெற்றி படங்கள் நீண்டு கொண்டே சென்றன. இப்படியான சூழலில்தான் இயக்கத்தின் மீது அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படித்தான் உருவானது மீசைய முறுக்கு திரைப்படம்.

அதில் ஒரு படி மேலே போய் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். தனது சொந்த வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும், காதல் தோல்வியையும் மையமாக வைத்து அற்புதமாக திரைக்கதை அமைத்து மீசைய முறுக்கு திரைப்படத்தை அவர் கொண்டு வந்தார். சுந்தர் சி தயாரிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் இருந்த போதிலும், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றதால் வசூலில் லாபம் பார்த்தது.

- Advertisement -

இந்த நிலையில், தொடர்ந்து நடிப்பில் மட்டுமே ஆதி தீவிரக் கவனம் செலுத்தி வந்தார். இதில் சில திரைப்படங்கள் ஆதிக்கு வெற்றி படங்களாகவும் அமைந்தன. நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, வீரன், கடைசி உலகப் போர், பிடி சார் என அவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால் சமீப காலமாக அவரால் பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை.

இப்படியான சூழலில்தான் தனது ஆஸ்த்தான திரைப்படமான மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார் ஆதி. இதன் மூலம் அவர் இயக்கத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். முதல் பாகத்தை எடுத்த சுந்தர் சி, இந்தப் பாகத்தையும் தயாரிக்கிறார். இதற்கான சூட்டிங் இன்று தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்