- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனுமதியின்றி வீடியோ காட்சிகளை பயன்படுத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் தனுஷ்...

அனுமதியின்றி வீடியோ காட்சிகளை பயன்படுத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர் தனுஷ் – களத்தில் இறங்கிய லேடி சூப்பர் ஸ்டார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான 75வது படம் அன்னபூரணி. அதன்பிறகு அவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி, நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என்ற ஆவணப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. நடிகை நயன்தாராவின் இதுவரை வாழ்க்கையை ஆவணப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் அவரது புகைப்பட காட்சிகள், சில வீடியோ காட்சிகள், திருமண வீடியோ உள்ளிட்டவை இடம்பெற்றன.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த ஆவணப்படம், 1 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடியது. இந்த படத்தில் நயன்தாராவின் குழந்தை பருவம், இளமை பருவம், சினிமா பயணம், காதல், திருமண வாழ்க்கை, குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் தொகுக்கப்பட்டு இருந்தன. இதில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோ பதிவும் இடம்பெற்றன.

ஆனால் நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர், நடிகர் தனுஷிடம் இதற்கான முறையான அனுமதியை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பெறவில்லை. அவரிடம் என்ஒசி வாங்காமலேயே நானும் ரவுடிதான் வீடியோ காட்சிகளை, இந்த ஆவணப்படத்தில் சேர்த்து விட்டனர். இதற்காக ரூ. 10 கோடி கேட்டு நடிகர் தனுஷ், நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனால் ஆவேசமடைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நடிகர் தனுஷ் குறித்து அறிக்கை வெளியிட்டனர். இதில் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டதாக, நடிகர் தனுஷை நயன்தாரா கடுமையாக விமர்சித்து இருந்தார். எனினும் இதற்கு பதில் தராமல் அமைதி காத்த தயாரிப்பாளர் தனுஷ், இப்போது இந்த ஆவணப் பட வீடியோ விவகாரத்தில் நயன், விக்கி மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

என்னுடைய அனுமதியின்றி, ஆவணப்படத்தில் காட்சிகளை பயன்படுத்தியதாக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளராக தனுஷ், இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து பதிலளிக்க நயன்தாரா தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வழக்கை எதிர்கொள்வது குறித்து நடிகை நயன்தாரா, தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சற்று முன்