- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் - எச் வினோத் இணையும் படம் இப்போதைக்கு இல்லே… - படத்தை ஓராண்டுக்கு...

நடிகர் தனுஷ் – எச் வினோத் இணையும் படம் இப்போதைக்கு இல்லே… – படத்தை ஓராண்டுக்கு தள்ளிப் போட்டதே டைரக்டர்தானா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை இயக்கியவர் எச் வினோத். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஏற்கனவே சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 வலிமை துணிவு நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் எச் வினோத். அதனால் அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து இருந்தார்.

ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் சொல்லுங்கள். அப்போது மற்ற கால்ஷீட் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று உறுதிமொழியும் நடிகர் தனுஷ் தந்திருந்தார். ஆனால் இப்போது அவர் அந்த உறுதிமொழியை மறந்து விட்டு எச் வினோத்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு விட்டார்.

- Advertisement -

தமிழில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் கடைசியாக கடந்தாண்டில் வெளியானது. அதன்பிறகு அவர் நடித்த இந்தி படம் தேரே இஸ்க் மெய்ன் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. அதன் பிறகு போர்த்தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்தார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.

அடுத்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஒரு படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார். அடுத்ததாக லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஓரிரு மாதங்களில் அந்த படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இது முழுக்க முழுக்க மதுரையில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தனுஷ் அடுத்து நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இதுபற்றி சமீபத்தில் இயக்குனர் எச் வினோத் நடிகர் தனுஷை சந்தித்துள்ளார். அப்போது ராஜ்குமார் பெரியசாமி தமிழரசன் பச்சமுத்து படங்களை நடித்து முடித்து விட்டு உங்கள் படத்தில் நடிக்க வருகிறேன். ஆனால் 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் தான் கால்ஷீட் தர முடியும் என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் எச் வினோத், நீங்கள் நடிக்கும் இந்த படம் கத்தரி வெயில் காலத்தில் எடுக்கப்படும் ஒரு கதைக்களமாக இருக்க வேண்டும். திரையில் எங்கும் பசுமையே தெரியக்கூடாது. எல்லாமே வறட்சியாக இருக்க வேண்டும். அதனால் எனக்கு ஆகஸ்ட் மாதம் கால்ஷீட் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு காலநிலை வேண்டும் என்றால் 2027ம் ஆண்டு மார்ச் முதல் உங்கள் படத்தில் நடிக்கிறேன். இதில் மாற்றமே இருக்காது என தனுஷ் உறுதியளித்துள்ளார். அதனால் ஓராண்டுக்கு இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளி போடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்