- Advertisement -
Homeபொழுதுபோக்குதிமுக தவெக பாணியில் தனது அரசியல் களத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய நடிகர் தனுஷ் -...

திமுக தவெக பாணியில் தனது அரசியல் களத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய நடிகர் தனுஷ் – அடேங்கப்பா சுள்ளான் ரொம்ப ஸ்பீடா இருக்காரே?

- Advertisement -

நடிகர் விஜய் தவெக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி 2 ஆண்டுகள் 3 மாதங்களில் ஆட்சிக்கு வந்ததை பலரும் சாதனையாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த வெற்றிக்கு பின்னால் பக்கபலமாக இருந்து உதவியவர்கள் வேறு யாருமல்ல. 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட திமுகவும் 55 ஆண்டுகள் பராம்பரியம் கொண்ட அதிமுகவும்தான்.

தமிழ்நாட்டை கடந்த 60 ஆண்டுகளாக அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தும் முழுமையான அதிகாரம் அவர்கள் கையில் இருந்தும் மக்களுக்கான தேவைகளை அடிப்படை வசதிகளை மக்களுக்கான நல்ல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாமல் கோட்டை விட்டு விட்டனர். மக்களை அலட்சியப்படுத்தி விட்டனர்.

- Advertisement -

இதனால் அவர்கள் மீது இருந்த கடும் அதிருப்தியும் வெறுப்பும் விரக்தியும் அப்படியே தவெக பக்கம் மக்களில் பலரையும் சாய வைத்துவிட்டது. மேலும் ஐடி விங்க் மூலம் தமிழ்நாடே தவெக பக்கம்தான் என்பது போன்ற ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தி தவெக மக்களை வசியப்படுத்தியதும் ஒரு மறுக்க முடியாத உண்மை தான். மாற்றம் விரும்பிய மக்களின் ஓட்டுகளே தவெக வெற்றிக்கு காரணம்.

ஆனால் 3 மாத தவெக ஆட்சியில் மக்களுக்கான நல்ல திட்டங்கள் எதுவும் இதுவரை இல்லை என்பதே கசப்பான உண்மை. விஜய் இன்னும் ரீல்ஸ் ஆட்சி நடத்துவதும் வீடியோ ஷூட்டில் கெத்து காட்டுவதும் 4 அமைச்சர்கள் மட்டுமே சட்டசபையில் பேசுவதும் திமுக அதிமுக தரப்பில் எந்த குறை சொன்னாலும், உங்க ஆட்சியில் சரியாக இருந்ததா? என்று திருப்பி கேட்பதுமே தவெகவின் அபத்தமான பதிலாக உள்ளது.

- Advertisement -

பாரம்பரியம் கொண்ட திமுக அதிமுக போன்ற ஆண்ட கட்சிகளையே ஒரு நொடியில் தூக்கி எறிந்த மக்களுக்கு 2 ஆண்டுகளே ஆன தவெக கட்சியை தூக்கி எறிய ஒரு நொடி கூட ஆகாது. இதை சற்று உணர்ந்துக்கொண்டு தவெக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை துதி பாடுவதை விட்டுவிட்டு இனி காலம் முழுக்க தவெக ஆட்சி தான் என்று சட்டசபையில் தம்பட்டம் அடிக்காமல் பொறுப்பு உணர்ந்து பேசினால், செயல்பட்டால் தான் மக்கள் ஆதரவு நீடிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த சூழலில் அடுத்ததாக அரசியல் களத்தில் குதிக்க உள்ள நடிகர் தனுஷ், ரூ. 1 கோடி செலவில் இப்போது தனது அரசியல் கட்சிக்கான ஐடி விங்க் அதாவது இணையதள கூலிப்படையை உருவாக்கி வருவதாக தெரிய வந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக திமுக தவெக காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு உள்ள ஆதரவு, தனது புதிய கட்சியை எப்படி வலுப்படுத்துவது என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்