தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருபவர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான இந்தி படம் தேரே இஸ்க் மெய்ன். இந்த படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த கர என்ற படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கர படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் டி 55 என்ற படத்தில் தனுஷ் இப்போது நடித்து வருகிறார். இதையடுத்து டி 56 படத்தில் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த லைன் அப்களுக்கு இடையில் இயக்குனர் எச் வினோத் – நடிகர் தனுஷ் ஒரு படத்தில் இணைய திட்டமிடப்பட்டது.
இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. ஜனநாயகன் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்கும் இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் தாமதம் நீடித்து வரும் நிலையில் இப்போது இந்த கூட்டணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. எச் வினோத் – தனுஷ் இருவரும் இணையும் படம் உருவாக காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே தனுஷ் கால்சீட்டை தவிர்க்காமல் இருக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் லலித்குமார், எச் வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனரை வைத்து தனுஷ் நடிப்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். அதன்படி லலித்குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சிறை. இந்த படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 மாரி செல்வராஜ் உடன் ஒரு வரலாற்று படம் இயக்குனர் ஷங்கரின் வேள்பாரி என தனுஷூக்கு அடுத்தடுத்து படங்கள் கமிட்டான நிலையில் இப்போது சிறை பட இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்திலும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படம் குறித்த பேச்சு வார்த்தையில் தயாரிப்பாளர் லலித்குமார் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அடுத்த ஆண்டு 2027 ஏப்ரல் மாதம் துவங்க இருப்பதாகவும் ஒரு தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது. அதற்கு முன்பாக சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தனுஷ் இந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





