- Advertisement -
Homeபொழுதுபோக்குவடசென்னை 2 படத்தில் இருந்து விலகிய நடிகர் தனுஷ், ரசிகர்களை ஏமாற்றிய இயக்குனர் வெற்றிமாறன் -...

வடசென்னை 2 படத்தில் இருந்து விலகிய நடிகர் தனுஷ், ரசிகர்களை ஏமாற்றிய இயக்குனர் வெற்றிமாறன் – இன்னும் இதுல நிறைய டிவிஸ்ட்டுகள் இருக்குது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு சினிமா படைப்பாளி. ஹீரோக்களை நம்பாமல், தனது கதைகளை நம்பும் ஒரு ஆற்றல் மிக்க இயக்குனர். அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் பேராவல் காட்டுகின்றனர்.

பொல்லாதவன் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அவரது ஆஸ்தான ஹீரோவே எப்போதும் நடிகர் தனுஷ்தான். தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என 4 மிகப்பெரிய ஹிட் படங்களிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்தது நடிகர் தனுஷ்தான். தனுஷ் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு முன்னணி நடிகராக உருவாக காரணமே, வெற்றிமாறன் படங்களில் அவர் நடித்த கேரக்டர்களும், அதில் அவர் காட்டிய அழுத்தமான நடிப்பும்தான்.

- Advertisement -

இப்போது விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன் அடுத்து, வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். அதன்பிறகு அவர் வடசென்னை 2 படத்தை இயக்க உள்ளார் என்றுதான் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் 2018ம் ஆண்டில் வெளியான வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வடசென்னை படத்தில் தனுஷ், அமீர், கிஷோர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ராஜூ கேரக்டரில் அமீர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்க காரணமே, வடசென்னை படத்தில் அவரது அற்புதமான நடிப்புதான்.

- Advertisement -

ஆனால் இப்போது லேட்டஸ்ட்டாக வந்த தகவலின்படி வடசென்னை 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவில்லை. அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார் என்று தெரிய வந்துள்ளது. அதே போல் தனுஷ், அமீர் நடித்த கேரக்டர்களில் அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்கள்தான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதைவிட முக்கியமாக வடசென்னை 2 படத்தை டைரக்ட் செய்யப் போவது இயக்குனர் வெற்றிமாறன் இல்லை, அவரிடம் துணை இயக்குனராக உள்ள கார்த்திகேயன்தான் டைரக்ட் செய்ய உள்ளார். மேலும் வடசென்னை 2 படத்தை தயாரிப்பது மட்டுமே வெற்றிமாறன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்