- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் கறாராக நடந்துக்கொள்ளும் நடிகர் தனுஷ், அட சம்பளம் இல்லீங்க - ஒரு டைரக்டரா...

அந்த விஷயத்தில் கறாராக நடந்துக்கொள்ளும் நடிகர் தனுஷ், அட சம்பளம் இல்லீங்க – ஒரு டைரக்டரா இருந்துட்டு இவரே இப்படி நடந்துக்கலாமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மிகவும் கவனிக்கப்படும் ஒரு திரைக்கலைஞனாக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருமகன் என்ற உறவை அறுத்துக்கொண்ட அவர் இப்போது நடிகர் இயக்குனர் பாடகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மையுடன் தமிழ் சினிமாவில் பவனி வருகிறார். கடந்த டிசம்பர் மாதம்தான் ஐஸ்வர்யா, தனுஷ் விவாகரத்து சட்டப்படியாக நடந்தது.

குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மனமுறிவை பற்றி கவலைப்படாமல் சிறிதும் அதுபற்றி சிந்திக்காமல் எந்நேரமும் சினிமா நடிப்பு இயக்கம் என மும்முரமாக தனுஷ் இருந்து வருகிறார். அடுத்தடுத்த லைன் அப்களால் அவர் சரியாக சாப்பிடுகிறாரா, தூங்குகிறாரா என்பதே சந்தேகப்படும் அளவுக்கு ரொம்பவும் பிஸியாக தனுஷ் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து இட்லிக்கடை படம் ஏப்ரல் 10ம் தேதி என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதே நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி ரிலீஸ் ஆவதால் இட்லிகடை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா நடித்த குபேரா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி, கவினை தொடர்ந்து தனுஷூம் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்தி படம் ஒன்றில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் அதையடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்கள், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர் நடிக்க கமிட் ஆகும் படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு முக்கிய கண்டிஷன் ஒன்றை போடுகிறார். அதாவது 40 நாட்கள் மட்டுமே நான் கால்ஷீட் தருவேன். அதற்கு பிறகு ஒரு நாள் கூட கூடுதலாக நான் நடிக்க மாட்டேன் என்பதுதான். படப்பிடிப்பில் கால தாமதம், திடீர் பிரச்னையால் படப்பிடிப்பு ரத்து எல்லாம் சாதாரணமாக அடிக்கடி நடப்பது. இயக்குனர், தயாரிப்பாளராக இருந்தும் தனுஷ் இதுகூட தெரியாமல் இப்படி கண்டிஷன் போடுவது ஏன் என அவர்கள் புலம்புகின்றனர்.

சற்று முன்