- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் கதாநாயகி கமிட் ஆகலே, படப்பிடிப்பும் துவங்கலே - ஆனா 50 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல்...

இன்னும் கதாநாயகி கமிட் ஆகலே, படப்பிடிப்பும் துவங்கலே – ஆனா 50 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமம் வியாபாரம் ஆன நடிகர் தனுஷ் படம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதாவது யதார்த்தமான நல்ல கதை அம்சமுள்ள படங்கள் திரைக்கு வருகின்றன. நல்ல கதைக்களத்தில் திரைக்கதை வடிவத்தில் சொற்பமான எண்ணிக்கையில் தான் அத்தகைய தமிழில் நல்ல படங்கள் திரைக்கு வருகின்றன. அப்படிப்பட்ட படங்கள் எப்போது வந்தாலும் அந்த படங்களை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி விடுகின்றனர்.

அந்த வரிசையில் காக்கா முட்டை குட்நைட் குடும்பஸ்தன் லப்பர் பந்து பார்க்கிங் டூரிஸ்ட் ஃபேமிலி தாய்கிழவி சிறை உள்ளிட்ட சில படங்களை தான் சொல்ல முடியும். இந்த படங்கள் கதைகளை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட சிறந்த படங்களாக இருக்கின்றன. வாழ்க்கையுடன் யதார்த்தங்களை புரிய வைக்கும் இத்தகைய படங்களை பார்க்கும் போது அந்த படங்கள் ரசிகர்களின் மனங்களுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகின்றன.

- Advertisement -

அந்த வகையில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் 2024ம் ஆண்டில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் சுவாசிகா ஹரீஸ் கல்யாண் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி காளி வெங்கட் டிஎஸ்கே தேவதர்ஷினி ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

தமிழ் சினிமா ரசிக பெருமக்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்துக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ஒரு விருது கூட லப்பர் பந்து படத்துக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை லப்பர் பந்து பட இயக்குனர் தமிழர்கள் பச்சமுத்து இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை. மேலும் படத்துக்கு இன்னும் கதாநாயகியும் கமிட் செய்யப்படவில்லை. இதுவரை 30க்கும் மேற்பட்ட நடிகைகளிடம் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆடிசன் நடத்திய நிலையில் அந்த கேரக்டருக்கு தகுந்த நடிகை இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மிகவும் பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் சிறந்த ஒரு ஆளுமை மிக்க நடிகை நாயகியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 50 கோடி ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் தமிழரசன் பச்சமுத்து – தனுஷ் இணையும் படம் என்பதால் இந்த படத்தை 50 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்