தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை துவங்கியவர் இளவரசு. பிறகு சில படங்களில் டப்பிங் பேசிய அவர் பிறகு சினிமாவிலும் சிறுசிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரது பக்குவப்பட்ட நடிப்பும் வசன உச்சரிப்பும் எளிதாக ரசிகர்களை கவர ஆரம்பித்து விட்டது.
குறிப்பாக முத்துக்கு முத்தாக படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது. அதே போல் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் மங்குனி பாண்டி மந்திரியாக வடிவேலுவுடன் நடித்திருப்பார். அறை எண் 305ல் கடவுள் சதுரங்க வேட்டை மாயாண்டி குடும்பத்தார் களவாணி என்ஜிகே என பல படங்களில் இளவரசு நடிப்பில் அசத்தியிருப்பார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு கூறியதாவது, சினிமாக்காரர்கள் அரசியலுக்கு போவதில் உடன்பாடு இல்லாத ஒரு சினிமாக்காரன் நான். மக்கள் சேவைக்காக நான் அரசியலுக்கு போறேன் என்று யார் சொன்னாலும் நான் சந்தேகிப்பேன். யார் சொன்னாலும் சந்தேகிப்பேன்.
பாப்புலாரிட்டி அதிகாரம் இந்த இரண்டும் மேல ஆசை இல்லாதவங்க யாரும் அரசியலுக்கு போக மாட்டாங்க. இவருக்கு என்ன புதுசா பாப்புலாரிட்டி தேவைன்னு அரசியலுக்கு போறார்? விஜய் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சொல்கிறேன். இதை அரசியல் சிஸ்டம் எவ்வளவு பிரச்னைகள், எவ்வளவு விமர்சனங்கள், எவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகிறது.
அய்யய்ய… இந்த முடிவை அவங்க ஏன் எடுக்கறாங்க அப்படீங்கறது அவங்களது தனிப்பட்ட விருப்பம்தான். தனிப்பட்ட உரிமை என்பதை எல்லாம் நான் ஏத்துக்கிறேன். ஒரு சினிமாக்காரனா எதுக்குப்பா இந்த வேண்டாத வேலை? கவுண்டமணி ஒரு படத்துல சொல்வார். அர்ஜூன் வேற மாதிரி யாராவது நாட்டை காப்பாத்துவங்கன்னு சொல்வார். அந்த மாதிரிதான்.
அரசியல் என்பது சூழ்ச்சிகள் நிறைந்த உலகம் அது. உங்களை யாரும் வாங்க வாங்க என்றெல்லாம் வரவேற்காது. கூட இருந்தே குழிபறிக்கறது என்பது ரூல். பாலிடிக்ஸ்ல இது ஒரு ரூல். இது ஒரு கேம் என்று நடிகர் இளவரசு அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இளவரசுவின் இந்த வெளிப்படையாக கருத்துக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.





