- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைகீழாக ஃபேனில் சுத்த வீட்ட காட்சிக்காக நான் உண்மையில் எவ்வளவு நேரம் தொங்கினேன் தெரியுமா.. கேட்ட...

தலைகீழாக ஃபேனில் சுத்த வீட்ட காட்சிக்காக நான் உண்மையில் எவ்வளவு நேரம் தொங்கினேன் தெரியுமா.. கேட்ட உங்களுக்கே தலை சுத்தும்.. குமுறும் ஜாபர் சாதிக்…

- Advertisement -

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படம் வெளியாகி இருக்கிறது. நெல்சன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கிஜராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினிக்கு உண்டான மாஸ் காட்சிகள் இருந்ததாலும், சிவராஜ்குமார் மோகன்லாலுக்கான மொமென்ட்களை படத்தில் வைத்ததாலும் ரசிகர்கள் ஜெயிலரை கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிரஞ்சீவியின் போலா ஷங்கர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து இருப்பதால், ஆந்திராவில் ஜெயிலருக்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படத்தின் வசூல் கிட்டத்தட்ட 300 கோடியை எட்டி உள்ளது.

ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் அறிமுகமாகும் காட்சியில், நடிகர் ஜாஃபர் சாதிக்கை மின்விசிறியில் தலைகீழாக கட்டி தொங்க விடுவது போல் சீன் அமைக்கப்பட்டிருக்கும். இது குறித்து சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், இதற்காக ஒரு நாள் முழுக்க தன்னை ஃபேனில் கட்டி சுத்த விட்டதாக கூறியுள்ளார். விக்ரம் மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து பிரபலமான அவர் ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து ஜாபர் பேசியதாவது,

- Advertisement -

மின்விசிறியில் கட்டி தொங்கவிடும் காட்சிக்காக, என்னிடம் கேட்காமலேயே டூப் செய்யும் நபரை ஈடுபடுத்தினார்கள். ஆனால் அவர் உயரம் சற்று அதிகமாக இருந்ததால், படக்குழுவினர் என்னிடம் கேட்டனர். நான் உடனடியாக அதற்கு நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த மாதிரி சின்ன சின்ன ரிஸ்குகளை என்னால் எடுக்க முடியும். இதை பிற்காலத்தில் கூற நன்றாக இருக்கும் என்பதால் உடனடியாக நடித்தேன். படப்பிடிப்பின் போது ரஜினி சார், நெல்சன், வி டிவி கணேஷ் ஆகியோர் அருகில் உட்கார்ந்திருப்பேன். அவர்கள் பேசும் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒருமுறை நானும் ரஜினி சாரும் அருகருகே அமர்ந்திருந்தோம். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருவரும் பேசாமல் இருந்தோம். நான் ரஜினி சாரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ரஜினி சார் என்னை பயங்கரமாக கலாய்ப்பார். எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். சீக்கிரம் திருமணம் செய்து கொள் மேன் என்று அவர் அடிக்கடி கூறுவார் என ஜாபர் சாதிக் ஜெயிலர் படத்தின் நினைவுகளை விவரித்தார்.

- Advertisement -

சற்று முன்