நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமா நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகராக நடிகர் விஜய் இருக்கிறார். சமீபமாக அவர் நடித்த லியோ, தி கோட் படங்களுக்கு 175 கோடி 200 கோடி என சம்பளம் வாங்கியிருக்கிறார். அடுத்து, தனது 69வது படத்துக்கு அவர் 275 கோடி என்று சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இன்னும் ரஜினி கமல் கூட இந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயை பொறுத்தவரை நெருக்கமான நண்பர்கள் என்றால் அவருடன் கல்லூரியில் படித்தவர்கள்தான். மற்றபடி திரையுலகில் சில நடிகர்களுடன் மட்டுமே சற்று நெருக்கமாக விஜய் பழகுவார். மற்றவர்களிடம் அவ்வளவு எளிதில் அவரது நட்பு, பழக்கம் இருக்காது.
ஷூட்டிங் வந்தாலும் கூட அவர் நடிக்க வேண்டிய காட்சிக்கு மட்டுமே கேரவன் வேனை விட்டு இறங்கி வருவார். அந்த காட்சியில் நடித்து முடித்தவுடன் கேரவனுக்குள் சென்று விடுவார். அதனால் அவரிடம் மற்ற நடிகர்கள் எளிதாக நெருங்குவது, பேசுவதோ நடப்பதே இல்லை என்று கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடித்த ஆர் ஆர் ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்றது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் இணைந்து ஆடிய நாட்டுக்கோட்டை பாட்டுக்கு ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டனர். தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா என்ற படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் ஜான்வி கபூர், சைப் அலிகான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தேவரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஜூனியர் என்டிஆர் ஜான்வி கபூர் அனிருத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நிருபர்கள் மத்தியில் பேசிய ஜூனியர் என்டிஆர் நடிகர் விஜய் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், நடனம் என்பது மிகவும் அழகான ஒரு விஷயம் அது சண்டை போடுவது போலவோ, ஜிம்னாஸ்டிக் செய்வது போலவோ இருக்க கூடாது. இயல்பாக ஆட வேண்டும். அதனை நடிகர் விஜய் சிறப்பாக செய்து வருகிறார். அவரது நடனத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். நாங்கள் முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி பேசிக் கொள்வோம். சமீப ஆண்டுகளாக எங்களுக்குள் தொடர்பு இல்லை என்று ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.





