- Advertisement -
Homeபொழுதுபோக்கு22 படங்களில் நானும் அவரும் இணைந்து நடித்தோம், என்னை போலவே என் மகனும் இருக்கிறார் -...

22 படங்களில் நானும் அவரும் இணைந்து நடித்தோம், என்னை போலவே என் மகனும் இருக்கிறார் – நடிகர் சின்னி ஜெயந்த் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எப்போதுமே ஹீரோவுக்கு இணையாக படம் முழுவதும் வரும் ஒரு காமெடி கேரக்டரில் காமெடி நடிகர்கள் நடிப்பது வழக்கம். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் நடிகர் நாகேஷ் அவர்களுடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து இருப்பார்.

அதேபோல் சந்திரபாபு சோ ராமசாமி தேங்காய் சீனிவாசன் டணால் தங்கவேலு உள்ளிட்ட பலரும் இந்த போல் அந்த காலகட்டத்தில் ஹீரோக்களுடன் இணைந்து காமெடி ரோலில் நடித்து இருந்தனர். அதன்பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் விஜய் அஜீத் குமார் சூர்யா போன்றவர்களின் படங்களிலும் காமெடி ரோலில் காமெடி நடிகர்கள் இணைந்து நடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் கவுண்டமணி செந்தில் வடிவேலு விவேக் சந்தானம் சூரி சதீஷ் யோகி பாபு என பலரும் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது வழக்கம். அந்த வரிசையில் கடந்த 1980களில் வெளியான படங்களில் 2ம் நிலையில் இருந்த ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகர் சின்னி ஜெயந்த்.

தமிழ் சினிமாவில் 1980 90களில் ஏராளமான படங்களில் சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் போல் மிமிக்ரி பேசி நடிப்பது ரசிகர்களிடம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. நடிகர் ரஜினிகாந்த் ரேவதி இணைந்து நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தில் தான் நடிகர் சின்னி ஜெயந்த் அறிமுகமாகி நடித்திருந்தார்.

- Advertisement -

இவர் பெரும்பாலான படங்களில் ஹீரோவுக்கு நண்பனாகத்தான் நடித்திருப்பார். அந்த வகையில் கல்லூரி மாணவராக பெரும்பாலான படங்களில் நடித்த நடிகர் முரளியுடன் நடிகை சின்னி ஜெயந்த் இணைந்து நடித்திருந்தார். அதனால் முரளி படம் என்றாலே அதில் கண்டிப்பாக சின்னி ஜெயந்த் அவரது நண்பராக நடித்திருப்பார் என்பது எழுதப்படாத விதியாக தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சுண்ணி சேர்ந்து கூறியதாவது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அதர்வா அப்பா முரளி கூட நண்பனா 22 படங்களில் நான் நடித்திருக்கிறேன். நான் முரளி எப்படி இருந்தோமோ அதே மாதிரி இப்போ என்னோட பையனும் அதர்வாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள் என்று நடிகர் சின்னி ஜெயந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்