- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது பிறந்த நாளில் ஞானபீடம் விருது பெறும் கவிஞர் வைரமுத்து - நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

தனது பிறந்த நாளில் ஞானபீடம் விருது பெறும் கவிஞர் வைரமுத்து – நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

- Advertisement -

கவிஞர் வைரமுத்து இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1980ம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் நிழல்கள் படம் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் கவிஞர் வைரமுத்து.

இதுவரை சுமார் 8000 பாடல்களை அவர் எழுதியிருக்கிறார். திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கவிதை நூல்கள் நாவல்கள் சிறுகதை கட்டுரை வாழ்க்கை வரலாறு மொழிபெயர்ப்பு சுயசரிதை என்று எல்லா வடிவ இலக்கியங்களையும் எழுதி சாதனை படைத்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

எண்ணற்ற கவிதை தொகுப்புகளையும் நாவல்கள் உட்பட 40க்கு மேற்பட்ட நூல்களை எழுதி வைரமுத்து வெளியிட்டுள்ளார். சிறந்த திரை இசை பாடலுக்கான தேசிய விருது இதுவரை வைரமுத்து 7 முறை பெற்றிருக்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவல் கடந்த 2003ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், பாட்டுக்குள் கவித்துவத்தை பொதிந்து வைத்த கவிதை தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழிய நீடு என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலக்கியத்துறையில் மிகச்சிறந்த விருதான ஞான பீடம் விருது டெல்லியில் இன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறுவதற்காக கவிஞர் வைரமுத்து டெல்லி சென்றுள்ளார். தனது பிறந்த நாளான இன்று இந்தியாவில் இலக்கியத்திற்கான வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞானபீடம் விருது பெறும் சிறப்பை கவிஞர் வைரமுத்து பெறுகிறார். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் இதை கொண்டாடி வருகிறார்கள்.

பல துறை சார்ந்த தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுவரை 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன் 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய 2 பேருக்கு மட்டுமே ஞானபீடம் விருது பெற்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து 3வது கவிஞராக வைரமுத்து இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது பிறந்தநாளில் இந்த ஞானபீடம் விருது அவருக்கு வழங்கப்படுவதும் சிறப்பம்சமாக உள்ளது.

சற்று முன்