- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்... என்ன அதுக்குள்ளேயும் எண்ட் கார்டு போட்டுட்டீங்க என ரசிகர்கள்...

விரைவில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்… என்ன அதுக்குள்ளேயும் எண்ட் கார்டு போட்டுட்டீங்க என ரசிகர்கள் வருத்தம்…

- Advertisement -

சின்னத்திரையில் சீரியல்கள் பார்ப்பதற்கென்று இங்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஒவ்வொருவரின் வீட்டிற்கு தொலைக்காட்சி புகுந்த போது சீரியல்களும் மக்கள் மனதில் ஒன்றாக கலந்து விட்டது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் ஒரு சீரியல் பிரபலமாக இருக்க அதனை பின்தொடர்பு அவர்களின் எண்ணிக்கையும், அதைப்பற்றி பேசுவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

 

உதாரணத்திற்கு ராதிகா நடித்த சித்தி சீரியலை கூறலாம். இன்று தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பன்முகத் திறமையுடன் விளங்கும் சமுத்திரக்கனி தான் சித்தி சீரியலை அந்த சமயத்தில் இயக்கியிருந்தார். அப்போது எங்கு பார்த்தாலும் சித்தி சீரியலை தான் பலரும் பேசிக்கொண்டே இருப்பார்கள்.

 

தமிழ்நாட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற இந்த சீரியல் பல்வேறு எபிசோடுகளை கடந்து முடிவுக்கு வந்தது. இதேபோல், செல்வி, அரசி, அண்ணாமலை, ஆனந்தம், கோலங்கள், மெட்டி ஒலி, நாதஸ்வரம் என ஏராளமான சீரியல்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளன.

 

இதில் சமீப காலமாக ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட சீரியல் எதிர்நீச்சல். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சீரியல் தொடங்கப்பட்டது. இதன் மிகப்பெரிய பலமே அதில் வில்லனாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவர் அதற்கு முன்பு தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

 

கொம்பன் ஜீவா என மாரிமுத்து நடித்த திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதுபோக கண்ணும் கண்ணும் புலிவால் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் அவர் இயக்கி இருந்தார். இருந்த போதிலும் மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். குணசேகரன் கதாபாத்திரத்தில் அவர் பேசிய ஒவ்வொரு வசனங்களும், இணையத்தில் வைரலாக ஆரம்பித்தன.

 

இப்படியான சூழலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு வேலு ராமமூர்த்தி நடிக்க வந்தார். திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வந்தாலும், மாரிமுத்துவிற்கு பிறகு அது போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படியான சூழலில் எதிர்நீச்சல் சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான குழு புகைப்படத்தையும் சமீபத்தில் அவர்கள் எடுத்துள்ளனர். அனேகமாக விரைவில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் வரலாம் என்று கூறப்படுகிறது.

சற்று முன்