- Advertisement -
Homeபொழுதுபோக்குமகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம்; வெளியான முக்கிய தகவல் - அப்போ...

மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம்; வெளியான முக்கிய தகவல் – அப்போ அவங்க படம் டைரக்ட் பண்ணலையா?

- Advertisement -

குரங்கு பொம்மை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். முதல் படத்திலேயே தன்னை ஒரு தரமான இயக்குனர் என்பதை அவர் நிரூபித்து விட்டார். யதார்த்தமான கதை களத்தில் உருவான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாரதிராஜா நடிப்பில் வேற லெவலில் தன்னை வெளிப்படுத்தி இருந்தார்.

ஆனால் குரங்கு பொம்மை படத்துக்கு பிறகு 7 ஆண்டுகள் கழிந்து இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய படம் மகாராஜா. கடந்தாண்டில் இந்த படம் திரைக்கு வந்தது. நடிகர் விஜய் சேதுபதிக்கு இது 50வது படமாகவும் அமைந்திருந்தது. கடந்தாண்டில் வெளியான படங்களில், இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் ஆகச் சிறந்த ஒரு படமாக மகாராஜா படத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம் மாபெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது. அதே நேரத்தில் படத்தில் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ், படத்தின் கதைக்களம், கேரக்டர்கள் என பல விஷயங்களிலும் இந்த படம் தமிழ் சினிமாவின் தரத்தை உலக சினிமா அளவுக்கு உயர்த்தி பிடித்தது. இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் தனது வில்லன் நடிப்பால் படத்துக்கு பெரிய வலிமை சேர்த்திருந்தார்.

இதுவரை காமெடியாக குறிப்பாக மனநலம் பாதித்த கேரக்டரில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்திய நடிகர் சிங்கம்புலி இந்த படத்தில் வேறு மாதிரியான ஒரு நடிப்பில் தரமான சம்பவம் செய்திருந்தார். நட்டி நடராஜ் முனீஷ்காந்த் அருள்தாஸ் அபிராமி பாய்ஸ் மணிகண்டன் என ஒவ்வொருவருடைய நடிப்பும் பேசப்பட்டது.

- Advertisement -

மகாராஜா படத்தை தொடர்ந்து நித்திலன் சாமிநாதன், நயன்தாரா நடிக்கும் நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்துக்கு மகாராணி என்று டைட்டில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போதைக்கு அந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கவில்லை என்ற உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தான் நித்திலன் சாமிநாதன் இயக்க உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற விஜய் சேதுபதியுடன் நித்திலன் சாமிநாதனும் சென்றிருந்தார். அங்கு இருவரும் அடுத்த படம் குறித்து பேசி ஆலோசனை நடத்திய நிலையில், விஜய் சேதுபதி நித்திலன் சாமிநாதன் மீண்டும் அடுத்த படத்தில் இணைவது முடிவாகி இருக்கிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்