- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி செய்திருந்தால் அபூர்வ சகோதரர்கள் தோல்வி படமாக இருந்திருக்கும் - பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை...

அப்படி செய்திருந்தால் அபூர்வ சகோதரர்கள் தோல்வி படமாக இருந்திருக்கும் – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகர் கமல்ஹாசன்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடித்த பேசும் படம் மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய சங்கீதம் சீனிவாசராவ். தற்போது சிங்கீதம் என்ற தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். அவருக்கு இப்போது 94 வயது என்பது குறிப்பிடத்தக்கது, சிங்கீதம் படம் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, சினிமா என்பது முழுக்க முழுக்க பேசன் சார்ந்தது. அதற்கு பிறகு தான் அது ஒரு வியாபாரமாக மாறுகிறது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. படம் எடுப்பதற்கு முன்பே அது 100 கோடி 200 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்று கணக்கு பார்க்கிறார்கள்.

- Advertisement -

நாங்கள் 15 லட்சம் ரூபாய் செலவில் எடுத்த படம்தான் பேசும் படம். எங்களுக்கு 150 கோடி ரூபாய் படம் எடுத்த திருப்தியை கொடுத்தது. ஒரு படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றோ அல்லது நிச்சயம் தோல்வியடையும் என்றோ யாராலும் எழுதி தர முடியாது. ஆனால் இந்த படத்தின் முடிவில் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எங்களால் சொல்ல முடியும். அப்படி மகிழ்ச்சி இல்லை என்றால் நாங்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம்.

அதுதான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடந்தது. படத்தின் முதல் 20 நாட்கள் எடுத்த காட்சிகளை நாங்கள் அப்படியே கைவிட்டு விட்டோம். அப்படியே தொடர்ந்து இருந்தால் அது ஒரு தோல்வி படமாக இருந்திருக்கும். ஆனால் அந்த தோல்வியில் இருந்து அந்த படத்தை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அதற்காக செலவழிக்கப்பட்ட பணத்துக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டி இருந்தது.

- Advertisement -

இருந்தாலும் தவறான ஒன்றை செய்வதை விட சரியான ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்தப் படத்தில் நான் எப்படி உயரம் குறைவான மனிதனாக அப்புவாக நடிக்கப் போகிறேன் என்பது 3 ஷாட்டுகளுக்குப் பிறகு யாருக்குமே தெரியாது. பலத்த யோசனைகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்தோம்.

அப்பு என்பது ஒரே ஒரு தந்திரம் தெரிந்த கதாபாத்திரம் அல்ல. அதில் பல வித்தைகள் இருந்தன என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். கடந்த 1990களில் வெளியான அபூர்வ சகோதர்கள் படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஒருவர் குள்ளமாக அப்பு கேரக்டரில் நடித்தது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எப்படி அப்படி குள்ளமாக நடித்தார் என்பது இன்று வரை விவாதமாக இருந்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்