- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனுக்கு இத்தனை மொழிகள் தெரியுமா? சிவாஜி கணேசன் கமலை பார்த்து இப்படி சொன்னாரா?...

நடிகர் கமல்ஹாசனுக்கு இத்தனை மொழிகள் தெரியுமா? சிவாஜி கணேசன் கமலை பார்த்து இப்படி சொன்னாரா? – அவரே சொன்ன தகவலுங்க இது!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், 5 வயதில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு அரங்கேற்ற வேளை படத்தில் அவர் வாலிபனாக நடித்த போது 16 அல்லது 18 வயது இருக்கலாம். தமிழ் சினிமாவில் நீண்ட கால அனுபவங்கள் மிக்க மூத்த கலைஞர் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல.

அதனால்தான் அவர் எந்த நேர்காணலில் கலந்துக்கொண்டாலும் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் மேடை நிகழ்ச்சிகளில் பேசினாலும் சினிமா சார்ந்த அவரது வாழ்க்கை அனுபவங்கள் அவ்வளவு ரசிக்கத்தக்க விஷயங்களாக இருக்கின்றன. உண்மையில் அவரது சினிமா பயண அனுபவங்களை எழுதினால், அது காலத்துக்கும் மங்காத ஒரு படைப்பாக இருக்கும்.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளிலும் கொண்டாடப்படும் ஒரு திரை கலைஞனாக கமல்ஹாசன் இருக்கிறார். பான் இந்தியா படங்களுக்கு முன்பே பான் இந்தியா நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்தான். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் துவங்கி ஜாக்கிசான் வரை பழகிய ஒரு உன்னத கலைஞன் கமல் என்றால் அது மிகையல்ல.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, எனக்கு தெலுங்கு மொழி தெரியும், ஆனா எழுத படிக்க தெரியாது. இந்தியும் தெரியும் ஆனா எழுத படிக்க தெரியாது. கன்னடமும் அப்படிதான். பெங்காலியும் அப்படிதான் எழுத படிக்க தெரியாது. ஆனா பேச தெரியும். மலையாளமும் தெரியும் ஆனா எழுத படிக்க தெரியாது.

- Advertisement -

இதுதவிர தமிழ் ஆங்கிலம் தெரியும். எழுத படிக்கவும் தெரியும். தமிழ் ஆங்கிலம் தவிர 5 மொழிகள் எனக்கு தெரியும். இதில் எந்த மொழியில் கவிதை சொன்னாலும் கரெக்டான இடத்தில் கைதட்டி பாராட்டுவேன். இளையராஜா என்ன பிஎச்டி படிச்சிட்டா சினிமாவுக்கு வந்தார். பண்ணைபுரத்தில் இருந்து அப்படியே புறப்பட்டு வந்தவர்தான்.

சிவாஜி கணேசனும் அப்படிதான். 3ம் கிளாஸ் படிச்சவர்தான். ஒருமுறை சிவாஜி கணேசன் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, நான் உன்கிட்ட ரொம்ப மரியாதையாக இருக்கிறேன்டா என்றார். ஆமாண்டா, நான் 3ம் கிளாஸ், நீ 8ம் கிளாஸ் என்னைவிட நீ அதிகமாக படிச்சவனாச்சே என்று சொன்னார் என்று அந்த நேர்காணலில் நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்