நாயகன் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ள படம் தக்லைஃப். வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி இந்த படம் வெளியாக உளளது. இதில் சிலம்பரசன் அசோக் செல்வன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிகைகள் திரிஷா அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சிம்பு முதன்முறையாக நடிகர் கமல்ஹாசனுடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் ஏற்கனவே வல்லவன் மனமதன் போன்ற படங்களில் நடிகர் கமல்ஹாசனை பின்பற்றிய சில கேரக்டர்களில் அவர் நடித்திருக்கிறார். கமல்ஹாசனை போலவே சில படங்களில் நடிக்கவும் அவர் முயற்சித்திருக்கிறார்.
நடிகர் சிம்பு ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில், சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். குறிப்பாக நடிகை நயன்தாராவுடன் அவரது காதல் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆனது. ஸ்ருதிஹாசன் சிம்பு காதலிப்பதாகவும் ஒரு கட்டத்தில் தகவல் பரவியது. ரஜினி மகள் ஐஸ்வர்யா சிம்புவை காதலிப்பதாகவும் செய்தி பரவி பரபரப்பானது.
ஆனால் இதுபோன்ற சில தகவல்களும் சிலர் கிளப்பி விடும் பொய்யான செய்திகளும் வதந்திகளும் நீண்ட நாட்களுக்கு நீடிப்பது இல்லை என்பது போல அவ்வப்போது திரை நட்சத்திரங்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதே போல் மாயமாகி விடுகின்றன. சிம்புவும் அப்படி பல விவகாரங்களில் சிக்கி வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் சிம்புவிடம் நல்ல மாற்றங்கள் இருப்பதாகவும் படப்பிடிப்பு தளங்களுக்கு சரியாக வருவது, நடிப்பில் முழு ஒத்துழைப்பை தருவது என மாறியிருக்கிறார். அதனால் தக்லைஃப் படத்தில் சிம்புவின் முழு ஒத்துழைப்பும் இருந்திருக்கிறது. நடிகர் சிம்பு குறித்து தொடர்ந்து கமல் பாராட்டி பேசி வருகிறார்.
சமீபத்தில் தக்லைஃப் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன், சிம்புவிடம் அதுபற்றி பேசியிருக்கிறார். ஆரம்பித்த போது இந்த படம் என்னுடைய படமாக இருந்தது. முடிக்கும் போது அது உன்னுடைய படமாக மாறிவிட்டது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது தக்லைஃப் படத்தை பொருத்தவரை சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அந்தளவுக்கு மதிப்பான ஒரு கேரக்டரில் மணிரத்னம் சிம்புவை நடிக்க வைத்திருப்பது கமல் சொன்ன வார்த்தைகளில் அது உறுதியாகி உள்ளது.





