- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரன் கூறியதாவது, எந்த மொழி என்றாலும் ஈஸியாக ரெண்டு பேர் மட்டுமே பேசுவார்கள். ஒருவர் கமல்ஹாசன் இன்னொருவர் நடிகை லட்சுமி. எதுன்னாலும் டப் டப்புன்னு கற்பூரம் மாதிரி 2 பேருமே பிடிச்சுக்குவாங்க. அவள் ஒரு தொடர்கதை படத்தை பெங்காலியில் எடுத்தாங்க. அங்கே போய் ஒரிஜினல் வாய்ஸ் பெங்காலியில் பேசி அதே கேரக்டர்ல கமல் நடிச்சிட்டு வந்தார். யாராலே முடியும்? பெங்காலி எல்லாம் வாயில நுழையுமா? கேமராவை அக்குவேறா பிரிச்சு மறுபடியும் ஒண்ணு சேர்ப்பார் கமல். அதை நான் நேர்ல பார்த்திருக்கிறேன் என்று ஒய்ஜி மகேந்திரன் கூறியிருக்கிறார்.





