- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் கமல்ஹாசன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட திடீர் பிளான் - ஆனால் ரஜினிகாந்த்...

கூலி படத்தில் கமல்ஹாசன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட திடீர் பிளான் – ஆனால் ரஜினிகாந்த் இதற்கு சம்மதிப்பாரா?

- Advertisement -

வேட்டையன் படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள அவரது 171வது படம் கூலி. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக கூலி வெளியாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் சௌபிர் சாஹிர் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். மோனலிசா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தும் நடிகர் கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் மிகவும் நெருக்கமான நண்பர்கள். 50 ஆண்டுகளாக அவர்களது அன்னியோன்யமான நட்பு இன்றும் தொடர்கிறது. இதுவரை கமல் குறித்து ரஜினியோ, ரஜினி குறித்து கமலோ ஒரு போதும் தவறாக விமர்சித்து பேசியது இல்லை. ஒருவரை ஒருவர் எப்போதுமே விட்டுத் தர மாட்டார்கள். தொழிலில் போட்டி இருந்தாலும் அவர்களை பொருத்த வரை உடன் பிறவா சகோதரர்கள்தான்.

சமீபத்தில் கூட நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்ததை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து, அவர் ராஜ்யசபா எம்பி ஆகும் சந்தோஷத்தை பகிர்ந்துக்கொண்டார். அந்த சான்றிதழை ரஜினியும் கொடுத்து வாழ்த்துப் பெற்றார். தனது குருநாதர் கே பாலசந்தருக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன் மதித்து அன்பு பாராட்டும் ஒரே நண்பர் அது நடிகர் ரஜினிகாந்த் தான்.

இந்த சூழலில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் கமல்ஹாசனும் வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யோசித்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அத்துடன் கடந்த 38 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்காமல் உள்ள நிலையில், கேமியோ ரோலில் ஒரு காட்சியில் மட்டும் கமல் வந்தால் அது நன்றாகவும் இருக்காது. படம் முழுவதும் இருவருக்கும் முக்கியத்தும் தரும் கேரக்டர்களில் வந்தால்தான் அது ரசிகர்களுக்கும் திருப்தியாக இருக்கும்.

அதனால் கூலி படத்தில் ஆரம்ப காட்சியில் நடிகர் கமல்ஹாசன் குரல் மட்டும் பின்னணியில் ஒலிக்க செய்யலாம் என்ற ஒரு பிளானை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருக்கிறார். இப்படி கமல் பின்னணி குரல் பேச நடிகர் ரஜினிகாந்த் சம்மதிப்பது முக்கியம். ரஜினிக்கு ஓகே என்றால் கமல் பின்னணியில் பேசுவதற்கு தாராளமாக முன்வந்து விடுவார். ஆனால் கமல் எனும் தனது ஆருயிர் நண்பரை அப்படி தனது படத்தில் சாதாரணமாக பின்னணி பேச வைக்க ரஜினி உடன்படுவாரா என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

சற்று முன்