- Advertisement -
Homeபொழுதுபோக்குயூத் படத்துக்கு இசையமைக்க சம்பளம் பேசிய நடிகர் கருணாஸ் - அதற்கு ஜீவி பிரகாஷ் சொன்ன...

யூத் படத்துக்கு இசையமைக்க சம்பளம் பேசிய நடிகர் கருணாஸ் – அதற்கு ஜீவி பிரகாஷ் சொன்ன பதில் – உருகிப் போய் மேடையில் பேசிய லொடுக்குப் பாண்டி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இயக்குனர் பாலா அறிமுகப்படுத்தியவர் கருணாஸ். நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்த கருணாஸ் முதல் படத்திலேயே தனது நடிப்பில் முத்திரை பதித்தார். தனக்கு தண்டனை கொடுத்த ஜட்ஜ் வீட்டிலேயே அவர் திருடும் காமெடி காட்சி இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

பல படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்த கருணாஸ் அதன்பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது கருணாஸ் மகன் கென் கருணாஸ் தமிழ் சினிமாவில் இயக்குனராக நாயகனாக யூத் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார்.

- Advertisement -

கடந்த 19ம் தேதி தியேட்டர்களில் வெளியான யூத் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 5 கோடி 2வது நாளில் ரூ. 6 கோடி என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தாய்கிழவி படம் போல இதுவும் பெரிய வசூலை குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் யூத் படம் பிரமோசன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசியதாவது, என்னுடைய 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் யாருகிட்டேயும் போய் உதவின்னு கேட்டு நின்றது கிடையாது. ஆனால் என்னோட பையன் கென் படத்தோட பாட்டுக்காக ஜீவி பிரகாஷ் கிட்ட போய் நின்று உதவி கேட்டேன்.

- Advertisement -

இந்த படத்துக்கு பாடி தர முடியுமா, இசையமைத்து தருவீங்களான்னு கேட்டேன். நீங்க நினைக்கிற சம்பளம் கொடுக்க முடியாது. இருந்தாலும் என்னால் முடிஞ்சதை கொடுக்கிறேன் என்றும் சொன்னேன். அப்போது அவர் உங்களுக்காகவும் கென்னுக்காகவும் நான் ப்ரீயாவே பண்ணி தரேன் அண்ணா என்று கூறினார் என்று அந்த மேடையில் நடிகர் கருணாஸ் உருக்கமாக கூறியிருக்கிறார்.

யூத் படத்தின் அபார வெற்றிக்கு ஜீவி பிரகாஷ்குமாரின் இசை மிகவும் பக்கபலமாக இருந்து வருகிறது. குறிப்பாக முட்டைக்கலக்கி பாடல்தான் இந்த படத்துக்கே பெரிய பிளஸ் பாயிண்டாக தமிழ்நாடு முழுவதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. சம்பளமே வேண்டாம் என்று மறுத்துவிட்டு யூத் படத்துக்கு மிக சிறந்த இசையை ஜீவி பிரகாஷ்குமார் தந்திருப்பதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்