இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் கருணாஸ். முதல் படத்திலேயே அவரது காமெடி நடிப்பும் டயலாக் டெலிவரியும் ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் மேடைகளில் கானா பாடல்களை பாடிக்கொண்டிருந்த அவரை இயக்குனர் பாலா தான் காமெடி நடிகராக தனது படத்தில் அடையாளம் காட்டினார்.
தொடர்ந்து பிதாமகன் படத்திலும் கருணாஸ் நடித்திருந்தார். படம் முழுவதும் கருணாஸை சூர்யாவுடன் நடிக்க வைத்திருந்தார் பாலா. அதே போல் பல படங்களில் கருணாஸ் நடித்தார். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் பாபா வசூல் ராஜா எம்பிபிஎஸ் பொல்லாதவன் திருடா திருடி பாணா காத்தாடி என பல படங்களில் கருணாஸின் காமெடி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஒரு கட்டத்தில் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதில் திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி என 2 படங்களுமே பெரிய வெற்றிப் படங்களாக கருணாஸூக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது. முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள கருணாஸ், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்தார்.
இப்போது ஆளுங்கட்சி திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் நடிகர் கருணாஸ், நடிகர் விஜய் தவெக கட்சியை துவங்கியது முதல் அவரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வருகிறார். நடிகர் விஜயுடன் புலி திருமலை புதிய கீதை போன்ற படங்களில் கருணாஸ் இணைந்து நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, விஜய் அரசியலுக்கு எந்த நோக்கத்துக்காக வந்தார் என்பது அவரைக் கேட்டால்தான் தெரியும். இத்தனை வருஷம் இல்லாத நோக்கம் இப்ப என்ன புதுசா வருது என்று அவரது ரசிகர்களே கேட்கிறார்கள். இதில் நாம என்ன கேட்கிறது?. நல்ல நோக்கத்துக்காக வராருன்னா நாம ஒண்ணும் சொல்ல போறதும் இல்ல. நல்ல நோக்கத்துக்கு வராருனா வரவேற்கலாம்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வரக் கூடாதுன்னு சொல்றதுக்கு யாருக்கும் இங்கே ரைட்ஸ் கிடையாது. ஆனா அவர் பேசுற பேச்சு, அவர் செய்ற விஷயம் எல்லாத்தையும் பார்க்கிறப்ப தப்பு தப்பா இருக்கு. அதனால்தான் நாம் அதை பாசிசம் என்று சொல்றோம் என்று நடிகர் கருணாஸ் விஜயை விமர்சித்து கூறியிருக்கிறார்.





