- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பொண்ணு என்னை பார்த்து சொன்ன அந்த ஒரு வார்த்தை, நான் 728 படங்களில் நடிக்க...

அந்த பொண்ணு என்னை பார்த்து சொன்ன அந்த ஒரு வார்த்தை, நான் 728 படங்களில் நடிக்க அதுதான் காரணம் – காமெடி நடிகர் குமரிமுத்து சொன்ன வாழ்க்கை அனுபவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது காமெடி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் குமரிமுத்து. இவரது வெடிச்சிரிப்பு இன்னும் அவரது ஒரு முக்கியமான அடையாளம். ஏராளமான படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத சிறந்த கலைஞர்களில் நடிகர் குமரிமுத்துவும் ஒருவர்.

மறைந்த காமெடி நடிகர் குமரிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கூறியதாவது, என் வீட்டில் எனக்கு திருமணம் செய்ய முடிவானது. நான் பெண் பார்க்க அவர்கள் வீட்டுக்கு சென்றேன். பெண்ணை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது. பெண்ணை எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி விட்டேன்.

- Advertisement -

உடனே அந்த பெண் உள்ளே போய்விட்டது. அந்த பெண்ணுடன் இருந்த தோழிகளும் உள்ளே போயிட்டாங்க. அப்புறம் அந்த வீட்டுக்காரங்க, உள்ளே போய் அந்த பொண்ணு கிட்ட கேட்டிருக்காங்க. மாப்பிள்ளைக்கு உன்னை பிடிச்சிருக்கு. உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு கேட்டிருக்காங்க.

எங்கே அவனை பிடிச்சிருக்கு? எனக்கு அவனை பிடிக்கலே. வடக்கே பார்க்கிற மாதிரி தெற்கே பார்க்கிறான். அவன் என்னை பார்க்கற மாதிரி எங்கேயோ பார்க்கறான். இவனை கட்டீட்டு நான் என்ன பண்றதுன்னு அந்த பெண் கேவலமா சொல்லிட்டாளாம். அந்த ஒரே ஒரு வார்த்தை என்னை இவ்வளவு பெரிய எடத்துல கொண்டு வந்து உட்கார வெச்சிருக்குதுன்னு பாருங்க.

- Advertisement -

அதனால் நான் எல்லோருகிட்டேயும் சொல்லுவேன். வார்த்தைகளை மட்டும் பார்த்து பேசுங்க ஒவ்வொருத்தர் கிட்டேயும். அது அலங்கார வார்த்தையாக இருக்கட்டும். அசிங்கமான வார்த்தையாக இருக்கட்டும். ஏதாக இருந்தாலும் அதை பார்த்து பேசுங்க. வார்த்தை ஒரு மனிதனை உயர்த்தும். ஒரு மனிதனை தாழ்த்தும்.

ஒரு மனிதனை கொன்னே போட்டுவிடும். இன்னொரு வார்த்தை அவரை உயரத்தில் கொண்டு போய் வாழ வைத்துவிடும். அந்த பொண்ணு சொன்ன அந்த அசிங்கமான வார்த்தை என்னை இவ்வளவு பெரிய சினிமா நடிகனாக 728 படங்களில் நடித்த நடிகன் குமரிமுத்துவாக மாற்றிவிட்டது என்று நடிகர் குமரிமுத்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்