- Advertisement -
Homeபொழுதுபோக்குசாதாரணமான தமிழ் நடிகர்களுக்கு இப்போது வாய்ப்பும் இல்லே, சினிமாவுல மரியாதையும் இல்லே, காரணம் இதுதான் -...

சாதாரணமான தமிழ் நடிகர்களுக்கு இப்போது வாய்ப்பும் இல்லே, சினிமாவுல மரியாதையும் இல்லே, காரணம் இதுதான் – சீனியர் நடிகர் லிவிங்ஸ்டன் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அற்புதமான சில நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் லிவிங்ஸ்டன். துவக்கத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். பூந்தோட்டக் காவல்காரன் படத்தின் கதையை நடிகர் விஜயகாந்திடம் லிவிங்ஸ்டன் சொன்ன போது, அவரை கவனித்த கேப்டன், அந்த படத்தில் வில்லன் கேரக்டரில் லிவிங்ஸ்னையே நடிக்க வைத்திருக்கிறார்.

அப்படி கேப்டன் விஜயகாந்த் மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் லிவிங்ஸ்டன். அதே போல் தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்திலும், லிவிங்ஸ்டனுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்திருந்தார் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்ந்து தமிழில் விரலுக்கேத்த வீக்கம், பாட்டுக்கு நான் அடிமை, சிவாஜி, பிரியமான தோழி, வயசு பசங்க, நான் அவன் இல்லை, வானத்தை போல, சுயம்வரம், லால் சலாம் என பல படங்களில் லிவிங்ஸ்டன் நடித்திருக்கிறார். அதிலும் சுந்தரபுருஷன், என்புருஷன் குழந்தை மாதிரி, சொல்லாமலே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் லிவிங்ஸ்டன் நடித்திருந்தார்.

ஆனால் சமீப காலமாக லிவிங்ஸ்டன் போன்ற நல்ல நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் வெகுவாக வாய்ப்பு குறைந்து போயிருக்கிறது. குறிப்பாக 2ம் நிலை, 3ம் நிலை ஹீரோக்களின் படங்கள் எடுப்பதே தமிழ் சினிமாவில் வெகுவாக குறைந்து விட்டால் பெரும்பாலான நடிகர்களுக்கு நடிக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

- Advertisement -

இதுகுறித்து சீனியர் நடிகர் லிவிங்ஸ்டன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த அனுபவத்துக்கு எல்லாம் இப்போது சினிமாவில் மரியாதையே கிடையாது. நடிகர்கள் எல்லாம் பெரிதாக பேசுவார்கள். ஆனா நேர்ல பார்க்கப் போனா, வீட்டு வாசலில் கூட சேர்க்க மாட்டார்கள்.

கார்பரேட் தயாரிப்பு சினிமா கம்பெனிகள் ஒரு சின்ன அப்பா ரோலுக்கு கூட உயரமான, வெள்ளையான நடிகர்தான் வேணும்கிறாங்க. மக்கள் அதைதான் விரும்பறாங்களான்னு தெரியலே. அதனால் என்னை மாதிரி சாதாரணமா இருக்கிற தமிழ் தெரிஞ்ச நடிகர்களை இப்ப யாரும் நடிக்கவே கூப்புடறது இல்லே என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்