- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல காமெடி நடிகர் மதன்பாப் திடீர் மறைவு - சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!

பிரபல காமெடி நடிகர் மதன்பாப் திடீர் மறைவு – சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த பல நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மதன்பாப். வயது 71 ஆன நிலையில் உடல் நலக்குறைவால் இன்று மாலை சென்னையில் அவர் காலமானார். சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் மதன்பாப் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை அவர் மறைந்தார்.

நடிகர் மதன் பாப்பின் நிஜப்பெயர் கிருஷ்ணமூர்த்தி. ஆரம்பத்தில் இசைக்கலைஞராக இருந்த அவர் கிடாரிஸ்ட் ஆக பணி செய்திருக்கிறார். தூர்தர்ஷன் டிவியில் இசைக்கலைஞராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு இயக்குனர் கே பாலச்சந்தரிடம் கிடைத்த அறிமுகத்தால் சினிமாவில் நடிக்க வந்தார். நீங்கள் கேட்டவை படத்தில் கீபோர்ட் ஆர்ட்டிஸ்ட் ஆக பாடல் காட்சியில் நடிகராக அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் மதன்பாப், வானமே எல்லை தேவர்மகன் பூவே உனக்காக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பிரண்ட்ஸ் தெனாலி ஐயா வேலு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமின்றி டிவி காமெடி ஷோ நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்றுள்ளார். மேலும் பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த மதன்பாப், இன்னும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்தார்.

நடிகர் மதன்பாப் சிரிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. தொடர்ந்து பல வினாடிகள் இடைவிடாமல் சிரித்துக் கொண்டே இருப்பது இவரது மேனரிஷம். மேடை நாடகம் விளம்பரங்கள் டிவி சீரியல்கள் என பலவற்றிலும் மதன்பாப் நடித்து ரசிகர்களை அசத்தியிருக்கிறார். மேலும் மதன் பாப் தனது இளம் வயதில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழலில் 71 வயதான நிலையில் புற்றுநோயல் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் மதன்பாப் மறைந்த நிலையில், சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த நடிகர் மதன் பாப்விற்கு சுசீலா என்ற மனைவியும் ஜனனி என்ற மகளும் அர்ஷித் என்ற மகனும் உள்ளனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு பல இசைக்கலைஞர்களிடம் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவர் பணியாற்றிய இசைக்கலைஞர்களில் மதன் பாப்வும் ஒருவர். இவரின் மியூசிக் ட்ரூப்பில் இணைந்து பல விளம்பரங்களுக்கு ஏஆர் ரகுமான் கீபோர்டு கலைஞராக பணியாற்றி இருக்கிறார். அதனால் ஏ ஆர் ரகுமான், மதன் பாப் தனது குரு என பல நேர்காணல்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்