- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜ் கதையில், ராகவா லாரன்ஸ் ஹீரோவாகும் திரைப்படத்திற்கு வில்லன் இந்த நடிகரா... அப்போ எல்சியு...

லோகேஷ் கனகராஜ் கதையில், ராகவா லாரன்ஸ் ஹீரோவாகும் திரைப்படத்திற்கு வில்லன் இந்த நடிகரா… அப்போ எல்சியு வில் அவருக்கும் ஒரு டிக்கெட் போடுங்கப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவின் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளை எடுப்பதில் பெயர் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். எப்போதும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவரது கூட்டத்திற்கும் அதீத முக்கியத்துவம் கொடுத்து அவர் படம் எடுப்பதால், தனித்துவமிக்க இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார்.

 

இதுவரை அவர் மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ என ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த திரைப்படம் பெற்ற வெற்றிகளும் அதனால் அவர் அடைந்த உயரமும் வேறு லெவலில் இருக்கிறது. இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

 

இதற்கு முன்னதாக போதைப்பொருள் கடத்தலையே மையப்படுத்தி கதை எழுதி வந்த அவர் இந்த முறை முதல் முறையாக, தங்கக் கடத்தலை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார். இதன் பெரும்பாலான காட்சிகள் விசாகப்பட்டினத்தில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டன. தற்போது ஜெய்ப்பூரில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

 

அதில் ரஜினிகாந்த் மற்றும் இந்தி நடிகர் அமீர்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார். இந்தத் திரைப்படம் தனது எல் சி யூ வில் வராது என்பதை ஏற்கனவே அவர் தெளிவுபடுத்தி விட்டார். இயக்கம் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரது தயாரிப்பில் முதல் முறையாக வெளியான ஃபைட் கிளப் திரைப்படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை.

 

இப்படியான சூழலில் தான் தற்போது பென்ஸ் என்னும் திரைப்படத்தை அவர் தயாரித்து வருகிறார். ரெமோ மற்றும் சுல்தான் திரைப்படங்களை எடுத்த பாக்யராஜ் கண்ணன் தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர். இதில் கதாநாயகனாக நடிப்பது ராகவா லாரன்ஸ். படத்தில் சமையல் கலைஞராக அவர் நடிக்க உள்ளார்.

 

இந்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் போது, இது எல் சி யு வில் வரும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதனால் படத்திற்கான வில்லன் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி மாதவன் தான் இந்த திரைப்படத்தின் வில்லனாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டுள்ளது. இதன்மூலம் அவர் எல் சி யு வுக்குள் வந்திருப்பதால் ரசிகர்கள் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டுள்ளனர்.

 

சற்று முன்