இப்போதெல்லாம் ஒரு ஹீரோ நடித்த படங்களை காண்பதில் ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருப்பதில்லை. ஒரே படத்தில் பல மொழி நடிகர்கள் வருவது அவர்களுக்கு ஒரு தனி உற்சாகத்தை தருகிறது. அதே நேரத்தில் அப்படி நடிக்க வரும் நடிகர்கள் வலுவான அழுத்தமான கேரக்டர்களில் நடித்தால் அந்த படம் பெரிய வெற்றியை பெறுகிறது.
ஆனால் பான் இந்தியா படங்கள் என்பது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு படமாக சிறந்த படைப்பாக நல்ல கதையம்சத்தில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக எல்லா மொழி ஹீரோக்களும் இணைந்து நடித்து விட்டால் அது பான் இந்தியா படம் என்கிற தவறான ஒரு புரிதலும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் மற்றொரு ஹீரோ நடிப்பது நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெறுகிறது. இது ஆரம்ப காலத்தில் எஸ்வி சேகர் பாண்டியராஜன் ராம்கி அருண்பாண்டியன் சத்யராஜ் பிரபு பார்த்திபன் முரளி என பல ஹீரோக்கள் இரட்டை நாயகர்களாக நடித்த அதே பார்மூலா தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே மலையாள நடிகர்கள் ஜெயராம் மோகன்லால் வினீத் பிருத்விராஜ் போன்றவர்கள் தமிழில் பல படங்களில் நடித்துள்ளனர். கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம்தளபதி. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் மம்முட்டி இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் மம்முட்டி பல படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். எதிரும் புதிரும் ஆனந்தம் அரசியல் மறுமலர்ச்சி மக்கள் ஆட்சி அழகன் மௌனம் சம்மதம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கிளிப்பேச்சு கேட்க வா என பல படங்களில் மம்முட்டி நடித்திருந்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தவர் நடிகர் மம்முட்டி. இப்போது ரஜினியின் மாஜி மருமகன் நடிகர் தனுஷ் நடிக்கும் டி 55 படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்த கம்மத் அண்ட் கம்மத் என்ற படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் தனுஷூடன் இணைந்து மம்முட்டி நடிக்கிறார்.





