- Advertisement -
Homeபொழுதுபோக்குபா ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தில் ஆர்யா, கெத்து தினேஷ் உடன் அந்த நட்சத்திரமும் இணைகிறாரா... அப்போ...

பா ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தில் ஆர்யா, கெத்து தினேஷ் உடன் அந்த நட்சத்திரமும் இணைகிறாரா… அப்போ இது ட்ரிபிள் ஹீரோ ஸ்டோரியா…

- Advertisement -

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதனைத் தொடர்ந்து மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி காலா, ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு தலித் திரைப்படங்கள் பலவும் வந்திருந்தாலும், அதற்கெல்லாம் அச்சாரமாய் அதன் பாதையிலேயே வேரூன்றி பயணித்தவர் தான் ரஞ்சித்.

ஆனால் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும் அது அனைத்து தரப்பினரையும் சென்று சேரவில்லை. இதே போல் ரஞ்சித்தின், தங்கலான் திரைப்படத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

- Advertisement -

சீயான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்த இந்த திரைப்படம் தொடர்பான போஸ்டர்களும் டீசர் அந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்தது. திரைப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இதனால் தங்கலான் மீது பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக திரைக்கதையை வலுவாக அமைப்பதில் கோட்டை விட்டார் பா ரஞ்சித். இதன் காரணமாக, தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதேசமயம், தங்கலான் திரைப்படம் வசூல் ரீதியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க, தனது அடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் பா ரஞ்சித். முதலில் அவர் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கி இருக்கிறார். முதலில் வேட்டுவம் என்னும் படத்தை அவர் இயக்க இருக்கிறார்.

இதில் கதாநாயகனாக, லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த கெத்து தினேஷ் நடிக்கிறார். இதில் வில்லனாக ஆர்யா வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான சூட்டிங் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் வேட்டுவம் படத்தில் மணிகண்டன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கதாநாயகனாக அவர் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த சூழலில், தற்போது வேட்டுவம் திரைப்படத்திலும் இணைந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்