- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா வாழ்க்கை வரலாறு படத்துல இப்படி ஒரு சிக்கலா? பாரதிராஜா கேரக்டரில் நடிக்க மறுத்த...

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்துல இப்படி ஒரு சிக்கலா? பாரதிராஜா கேரக்டரில் நடிக்க மறுத்த பிரபல நடிகர் – அட அவரே நடிக்கலைன்னா எப்படி?

- Advertisement -

தமிழ் சினிமாவில், கடந்த 47 ஆண்டுகளாக இசை சக்கரவர்த்தியாக ரசிகர்களின் மனதை தனது இசையால் ஆட்சி செய்து வருகிறார் இசைஞானி இளையராஜா. தனி மனிதராக அவர் மீதான விமர்சனங்கள் நிறைய இருந்தாலும், ஒரு இசைக்கலைஞராக அவர் சாதனைகள் எண்ணிலடங்காதவை. பல்வேறு பெருமைகளை கொண்டவை. அவருக்கு நிகர் அவராகவே மட்டுமே இசையில் இருக்க முடியும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

அப்படிப்பட்ட இசைஞானி இளையராஜாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவரது வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது. 2 பாகங்களை இந்த படங்கள் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். 2 பாகங்களில் எடுக்கப்படும் இளையராஜா படத்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

- Advertisement -

இளையராஜாவின் இளமைக்கால வாழ்க்கை, பண்ணைபுரத்தில் அவர் வளர்ந்த வாழ்க்கை, பிறகு சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தது வரை ஒரு பாகமாகவும், அதன்பிறகு சினிமாவில் அன்னக்கிளி படம் மூலம் ஆரம்பமான அவரது இசை பயணம் துவங்கி, இப்போது வரை அவரது இசை சாதனைகளை விளக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது. கேப்டன் மில்லர் டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை பயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தவர்களும் இந்த படங்களில் முக்கிய கேரக்டர்களாக நடிக்கின்றனர். ஆனால் அவர்களில் சிலர் இப்போது இல்லை, மறைந்துவிட்டனர். இன்னும் சிலர் முதுமை காரணமாக, இளையராஜாவுடன் மோதல் காரணமாக இந்த படங்களில் நடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, அவர்களை போன்ற முகச்சாயல் கொண்ட நடிகர்களை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில், அன்னக்கிளி படத்தில் முதன் முதலாக இசையமைக்க இளையராஜாவுக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் கேரக்டரில், அவரது மகன் நடிகர் பஞ்சு சுப்பு நடிக்கிறார். அதே போல் கங்கை அமரன், வைரமுத்து, கமல்ஹாசன் உள்ளிட்டோர் கேரக்டர்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் இயக்குனர் பாரதிராஜா, இளையராஜாவின் நீண்ட கால நண்பர். ஆரம்பத்தில் இருந்தே இளையராஜாவும் அவரும் ஒன்றாக பயணித்தவர்கள். முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் என பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள். அதனால் இளையராஜா படத்தில் பாரதிராஜா கேரக்டரில் நடிக்க அவரது மகனும், நடிகருமான மனோஜ் பாரதியை, அணுகியுள்ளனர். ஆனால் மனோஜ் பாரதி, தனது தந்தை பாரதிராஜா கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டார். சம்பள பிரச்னையா, சென்டிமென்டா எனத் தெரியவில்லை. ஆனால் அவரே மகனே பாரதிராஜா கேரக்டரில் நடிக்க மறுக்கிறாரே என்றுதான் பலரும் பேசி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்