- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபுவுக்கு ஒடம்பு சரியில்லையா? அதெல்லாம் நம்ப மாட்டேன், அதுல அவர்தான் கில்லாடி - நடிகர்...

நடிகர் பிரபுவுக்கு ஒடம்பு சரியில்லையா? அதெல்லாம் நம்ப மாட்டேன், அதுல அவர்தான் கில்லாடி – நடிகர் மன்சூர் அலிகான் இப்படி கலாய்த்து விட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன். மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராக உள்ளார். அவரது தம்பி பிரபு பிரபல நடிகராக இருந்து வருகிறார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

பிரபு நடித்த படங்களில் அக்னி நட்சத்திரம் அரங்கேற்றவேளை என் தங்கச்சி படிச்சவ சின்னதம்பி சின்ன மாப்ளே கிழக்குகரை குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் என பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்துக்கு பிறகு நடிகர் பிரபு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அப்பா அண்ணன் போன்ற கேரக்டர்களிலும் பிரபு நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நடிகர் பிரபுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமாகி சில படங்களில் அடியாட்களில் ஒருவராக நடித்த அவரை தனது கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த் தான். அதுவும் வீரபத்ரன் என்ற கேரக்டரில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்து அவரை பிரபலப்படுத்தினார்.

அதனால் இன்று வரை கேப்டன் விஜயகாந்த் மீது அதீத அன்பும் பற்றும் மரியாதையும் கொண்டவராக நடிகர் மன்சூர் அலிகான் இருந்து வருகிறார். அதே நேரத்தில் சினிமா நடிகருக்கான பந்தா எதுவும் இல்லாத யதார்த்த மனிதராக அவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பிரபு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது யதார்த்தமா, கிண்டலா என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, நடிகர் பிரபுவுக்கு இங்கே உடல் நலமில்லை என்று சொன்னார்கள். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். உங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன். நடிகர் பிரபுவை போல குதிரை ஓட்டத் தெரிந்த ஒரு ஆள் இந்தியாவிலேயே யாரும் இல்லை. பெங்களூரில் டிரெயினிங் எடுத்தவர்.

ஒருமுறை பிரபு குதிரை ஓட்டுவதை பார்த்து கேப்டனே மிரண்டு போய் விட்டார். அந்தளவுக்கு பிரபு குதிரை ஓட்டுவார். 120 கிலோ மீட்டர் வேகத்தில் குதிரையில் பறப்பார். குதிரையே செத்தாலும் அவர் இறங்கி வர மாட்டார். அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் நம்ப முடியுமா என்று அந்த விழாவில் மன்சூர் அலிகான் கிண்டலாகவும் யதார்த்தமாகவும் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்